அந்த ஒரு இடம்.. லடாக்கில் "பிங்கர் -4'' பகுதியில் பின்வாங்காத சீனா.. இந்தியா தீவிர ரோந்து.. பின்னணி!
லடாக்: லடாக்கில் கல்வான் எல்லையில் சீனா படைகளை வாபஸ் வாங்கினாலும் இன்னும் பாங்காங் திசோ பகுதியில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை. இதற்கு பின் சில காரணங்கள் சொல்லப்படுகிறது.
Recommended Video
லடாக் எல்லையில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுகிழமை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இதை தொடர்ந்து எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்க சீனா ஒப்புக்கொண்டது. அதன்படி கல்வான், டெப்சாங், ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி உள்ளது.

ஆனால் இன்னும் இல்லை
ஆனால் இன்னும் பாங்காங் திசோவின் கட்டுப்பாட்டு பகுதி 4ல் இருந்து சீனாவின் படைகள் வாபஸ் வாங்கவில்லை. இங்குதான் சீனா முதலில் ஆக்கிரமிப்பு பணிகளை செய்தது. இங்குதான் முதலில் சீனா படைகளை குவித்தது. இங்கிருந்து சீனாவின் படைகளை இன்னும் வாபஸ் வாங்கவில்லை. பாங்காங் திசோ பகுதியை மொத்தம் 8 பிங்கர்கள் எனப்படும் கட்டுப்பாட்டு பகுதிகளாக பிரித்து இருக்கிறார்கள்.

என்ன பிரிப்பு
இதில் முதல் 4 பகுதியை இந்தியாவும், அடுத்த 4 பகுதியை சீனாவும் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த பகுதி அனைத்தும் மொத்தமாக வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்து வருகிறது.ஆனால் இங்கு சீனா அத்துமீறி இந்தியாவின் கட்டுப்பாட்டு பகுதிகள் 3 மற்றும் 4ஐ கட்டுப்படுத்தியது. இந்த இடத்தில் இருந்து சீனாவின் படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்தது.

பின்னணி
இந்த நிலையில் தற்போது பிங்கர் 3 பகுதியில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. ஆனால் பிங்கர் 4 பகுதியில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை. அதிலும் கூட பிங்கர் 3 பகுதியில் இருந்து சீனா மிக மெதுவாகவே படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. அங்கு இன்னும் கொஞ்சம் துருப்புகள் உள்ளது. பேச்சுவார்த்தையின் படி முதல்கட்ட அமைதி என்பது, மொத்தமாக 4 கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து சீனா வெளியேற வேண்டும்.

வெளியேறவில்லை
ஆனால் சீனா இன்னும் எல்லையில் இருந்து வெளியேறவில்லை. பாங்காங் திசோவில் இரண்டு பிங்கர்களை கைப்பற்றிய காரணத்தால் சீனாவிற்கு இந்தியா மீது ஆதிக்கம் இருந்தது. இந்த ஆதிக்கத்தை சீனா தொடர நினைக்கலாம். அதுவும் கூட அங்கே சீனா படைகளை வாபஸ் வாங்காமல் இருக்க காரணமாக இருக்கலாம், என்று கூறுகிறார்கள். இதனால் தற்போது எல்லையில் அந்த பகுதியில் இந்திய ராணுவம் மிக தீவிரமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
-
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications