5000 அடி உயரத்தில் பயிற்சி.. சீனாவின் "LIVE FIRE DRILL".. திபெத் எல்லையில் களமிறங்கிய ஸ்பெஷல் படை!
லடாக்: இந்தியா - சீனா இடையே இப்படி போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சீனாவின் ராணுவம் எல்லையில் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திபெத் எல்லையில் இந்த பயிற்சிகள் நடந்து வருகிறது.
Recommended Video
லடாக் எல்லையில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது. அங்கு தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. இரண்டு நாட்கள் முன் லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் இந்தியா சீனா இடையே சண்டை நடந்தது.
இந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வருகிறது. அடுத்து எல்லையில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீனா பயிற்சி
இந்தியா சீனா இடையே இப்படி போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சீனாவின் ராணுவம் எல்லையில் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் எப்போதும் இல்லாத அளவிற்கு திபெத் பாதுகாப்பு படையுடன் இணைந்து சீனா அதிரடியாக போர் பயிற்சிகளை செய்து வருகிறது. திபெத் என்பது சீனாவிற்குள் இருக்கும் தன்னிச்சையான உரிமை கொண்ட பகுதியாகும்.

எங்கே பயிற்சி
இவர்களின் டிஏஆர் படையுடன் சீனாவின் பிஎல்ஏ ராணுவமும் சேர்ந்து தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 5000 அடி உயரத்தில் இருக்கும் திபெத் மலை பகுதியில் இந்த பயிற்சிகள் நடக்கிறது. சீனா இந்த பயிற்சிக்காக நவீன ஆயுதங்கள், டாங்கிகள், ஏவுகணைகளை அங்கே குவித்து வைத்துள்ளது. இந்தியாவை வளைக்கும் வகையில் அங்கு சீனா இப்படி பயிற்சிகளை செய்து வருகிறது.

ஏன் முக்கியம்
இந்த பயிற்சி ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால் இது live five drill எனப்படும் பயிற்சி முறையாகும். அதாவது உண்மையாக எல்லையில் துப்பாக்கியால் சுட்டு, ஆயுதங்களை பயன்படுத்தி, வேகமாக வேறு இடங்களுக்கு ஓடி, டாங்கிகளை இயக்கி,ஏவுகணைகளை ஏவ தயார் செய்து பயிற்சிகளை செய்வார்கள். அதாவது போர் நடப்பது போலவே அனைத்து பயிற்சிகளையும் அப்படியே செய்வார்கள்.

விமானப்படை எப்படி
அதோடு 15000 அடி உயரத்தில் அங்கு சீனாவின் விமானப்படை விமானங்கள் பறந்து பயிற்சிகளை மேற்கொண்டது. திபெத் எல்லைக்கு அருகே வரும் பகுதியில் இந்த பயிற்சி நடந்தது. ஆனால் மிக சரியாக எந்த இடத்தில் பயிற்சி நடந்தது என்ற விவரத்தை சீனா இன்னும் வெளியிடவில்லை. இந்தியாவை திபெத் மற்றும் நேபாளம் மூலம் நெருங்குவதற்கு சீனா முயன்று வருகிறது.

தயார் ஆன இந்திய ராணுவம்
அதன் ஒரு பகுதியாக இந்த பயிற்சி பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவம் ஏற்கனவே தயார் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. முப்படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைத்தையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இரண்டு நாடுகளும் போருக்கு தயார் ஆகிறதா என்று கேள்விகளும் பதற்றமும் எழுந்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications