60 வருட பிளான்.. 1960லிருந்து லடாக்கின் ''கிரீன் லைனை'' பிடிக்க முயற்சிக்கும் சீனா.. பரபர பின்னணி!
லடாக்: லடாக்கில் திபெத் அருகே இருக்கும் கிரீன் லைன் (green line) என்ற எல்லை பகுதியை சீனா கைப்பற்ற நினைப்பதாக தகவல்கள் வருகிறது. இதனால்தான் எல்லையில் கடந்த சில நாட்களாக சீனா அத்துமீற முயன்று வருகிறது.
Recommended Video
இந்தியா சீனா இடையே லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. கடந்த மே மாதம் - ஜூலை மாதம் வரை லடாக்கில் கல்வான் பகுதியிலும் பாங்காங் திசோ பகுதியிலும் சீனா அத்துமீறி வந்தது. அதன்பின் சமாதான பேச்சுக்கு பின், எல்லையில் கொஞ்சம் அமைதி நிலவியது.
ஆனால் தற்போது மீண்டும் எல்லையில் பாங்காங் திசோவிலும், சுசூல் பகுதியிலும் சீனா அத்துமீற தொடங்கி உள்ளது. கடந்த 29ம் தேதியில் இருந்து மீண்டும் எல்லையில் அத்துமீற சீனா முயன்ற வருகிறது.

எங்கே பிடிக்கிறது
அதிலும் லடாக்கில் இருக்கும் சுசூல் பகுதியில் அத்துமீறவே சீனா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. பொதுவாக லடாக்கில் மோதல் நடக்கும் போதெல்லாம் இங்குதான் அமைதி பேச்சுவார்த்தை நடக்கும். சுசூல் பகுதியில்தான் இரண்டு நாட்டு ராணுவ பேச்சுவார்த்தை இயல்பாக நடக்கும். இங்கு பெரிய அளவில் மோதல்கள் வந்தது இல்லை.

ஆனால் என்ன
ஆனால் இந்த இடத்தைதான் தற்போது சீனா ஆக்கிரமிக்க முயன்று வருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் திபெத் மற்றும் அக்சய் சின் பகுதிகளுக்கு அருகில் இந்த சுசூல் பகுதி இருக்கிறது. இங்குதான் கிரீன் லைன் (green line) எனப்படும் எல்லை அமைந்துள்ளது. இந்தியாவிற்கு உள்ளே இந்த எல்லை அமைத்துள்ளது. இந்த எல்லை வரை இருக்கும் பகுதிகளை தற்போது ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகிறது.

கிரீன் லைன் என்றால் என்ன
சுசூலில் இருக்கும் இந்தியாவின் நிலப்பரப்பை உள்ளடக்கி இந்த கிரீன் லைன் (green line) கோட்டை சீனா வரைந்துள்ளது. இதை எல்லையாக குறிப்பிட்டு, கூடுதல் இடங்களை ஆக்கிரமிக்க சீனா நினைக்கிறது. இதை எல்லையாக கருதினால் மொத்தமாக சுசூல் சீனாவின் வசம் செல்லும். அதேபோல் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாங்காங் திசோவின் கட்டுப்பாட்டு பகுதி 4 சீனாவின் வசம் செல்லும்.

வேறு இடம்
அதேபோல் பாங்காங் திசோ தெற்கில் இருக்கும் பெரும்பாலான பகுதிகள் சீனாவின் வசம் செல்லும். இதனால்தான் கிரீன் லைன் (green line) கோட்டை எப்படியாவது கைப்பற்ற சீனா முயன்று வருகிறது. 1960லேயே இந்த கோட்டை சீனா தனது வரைபடத்தில் வெளியிட்டுவிட்டது. அதன்பின் சீனாவின் பல அதிபர்கள் இந்த கோட்டை பிடிக்க முயன்று தோல்வி அடைந்தனர். தற்போது ஜிங்பிங் அந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

ஊடுருவல்
இதனால்தான் லடாக்கில் கடந்த வாரம் சீனா ஊடுருவ முயற்சி செய்து இருக்கிறது. கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சீனா லடாக்கில் ஊடுருவ முயன்றது. இந்த கோட்டை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் சீனா ஊடுருவ முயன்று இருக்கிறது. ஆனால் இதை இந்தியாவின் படை வெற்றிகரமாக முறியடித்தது. சீனாவின் திட்டத்தை இந்தியா கலைத்தது.

அதிபர்கள் திட்டம்
சுசூல் பகுதியை கைப்பற்ற சீனா பல வருடமாக முயன்று வருகிறது. இந்த முறையும் இந்த பகுதியை கைப்பற்ற சீனா முயன்று வருகிறது. ஆனால் இந்தியாவின் படைகள் எல்லையில் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது. சீனா எங்கும் அத்துமீறாத வகையில் அதிக அளவில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவின் கனவு இந்த முறையும் எல்லையில் கலைந்து போகவே வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications