லடாக்கில் நிலைமை பதற்றமாக உள்ளது.. படைகளை குவித்து உள்ளோம்.. இந்திய ராணுவ தளபதி பரபரப்பு!
லடாக்: லடாக் எல்லையில் நிலைமை பதற்றமாக உள்ளது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படைகளை குவித்து உள்ளோம் என்று இந்திய ராணுவ தளபதி நரவனே தெரிவித்துள்ளார்.
Recommended Video
லடாக்கில் தற்போது நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. எல்லையில் கடந்த சனிக்கிழமை இரவில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 5 நாட்களில் மூன்று முறை அமைதி பேச்சுவார்த்தை நடந்தும் கூட எல்லையில் பதற்றம் தணியவில்லை.
இரண்டு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டு வருகிறது. லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோவில் இரண்டு நாட்டு படைகளும் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

பேட்டி அளித்துள்ளார்
இது தொடர்பாக இந்திய ராணுவ தளபதி நரவனே அளித்துள்ள பேட்டியில், லடாக் எல்லையில் நிலைமை பதற்றமாக உள்ளது. எல்லையை பாதுகாக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படைகளை குவித்து உள்ளோம். படை வீரர்கள் எல்லோரும் தயார் நிலையில் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று ஆய்வு
இந்திய ராணுவம் எதற்கும் தயாராக இருக்கிறது. படை வீரர்கள் அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர். நேற்று நான் லே பகுதிக்கு சென்று இருந்தேன். அங்கு எல்லையை பார்வையிட்டேன். வீரர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். அவர்கள் அனைத்தையும் எதிர்கொள்ளும் மன வலிமையுடன் இருக்கிறார்கள்.

சிறப்பான வீரர்கள்
எனக்கு சந்தேகமே இல்லை. உலகில் இந்திய வீரர்கள்தான் சிறப்பானவர். இந்திய ராணுவத்தை மட்டுமல்ல மொத்த இந்தியாவையும் நமைத்து வீரர்கள் பெருமைப்படுத்துவார்கள். எல்லையில் தற்போது பதற்றம் நிலவி வருவது உண்மைதான். எல்லையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

ரோந்து
எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து தொடர்ந்து எனக்கு தகவல்கள் வந்தபடி இருக்கிறது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுத்து உள்ளோம். லே பகுதியில் வீரர்கள் உடன் பேசினேன். எல்லையில் நிலவும் விஷயங்கள் குறித்து அவரிடம் கேட்டறிந்தேன். லேவில் நமது வீரர்கள் பாதுகாப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications