பேச்சுவார்த்தைக்கு இடையே.. வானத்தை நோக்கி சுட்ட சீனா.. லடாக் துப்பாக்கி சூடு.. வெளிவரும் உண்மைகள்!

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. எல்லையில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் சீனாதான் இந்திய ராணுவத்தை நோக்கி சுட்டது, இந்தியா சுடவில்லை என்ற உண்மை வெளியாகி உள்ளது.

Recommended Video

    இந்தியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக புகார் கூறிய சீனா

    லடாக்கில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். கல்வான் பகுதியில் நடந்த இந்த மோதலுக்கு பின் எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பியது. ஜூலை 6ம் தேதி நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் எல்லையில் அமைதி திரும்பியது.

    ஆனால் ஒன்றரை மாத அமைதிக்கு பின் லடாக்கில் மீண்டும் தற்போது போர் மேகம் சூழ தொடங்கி உள்ளது. லடாக்கில் கடந்த 29ம் தேதியில் இருந்து சீனா அத்துமீற தொடங்கி உள்ளது.

    லடாக் மோதல்

    லடாக் மோதல்

    இந்த நிலையில்தான் லடாக்கில் இந்தியா துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா கூறியுள்ளது. லடாக்கில் பாங்காங் திசோவின் தெற்கு பகுதியில் இருக்கும் ஷென்போ மலையில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த ஷென்போ மலைப்பகுதி சூசுல் பகுதிக்கு மிக அருகில் இருக்கிறது. இங்குதான் எப்போதும் எல்லையில் அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    எல்லை அமைதி

    எல்லை அமைதி

    இந்த நிலையில் இந்தியா இங்கே துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா கூறியுள்ளது. இந்த நிலையில் லடாக்கில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. எல்லையில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் சீனாதான் முதலில் சுட்டு இருக்கிறது. இந்தியா கடைசி வரை சுடவே இல்லை.

    முதலில் சீனா

    முதலில் சீனா

    எல்லையில் முதலில் சீனாதான் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. சுசூல் பகுதியில் இந்திய - சீன ராணுவம் இடையே மால்டோ போஸ்ட் அருகே பேச்சுவார்த்தை நடந்து வந்து இருக்கிறது.நேற்று இரவு பேச்சுவார்த்தை நடக்கும் போது, சீனா துப்பாக்கியால் சுட்டு உள்ளது. வானத்தை நோக்கி சீனாவின் படைகள் துப்பாக்கியால் சுட்டு உள்ளது . இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இந்தியா மீண்டும்

    இந்தியா மீண்டும்

    இதையடுத்து சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா எல்லையில் படைகளை குவித்துள்ளது. ஆனால் துப்பாக்கி சூடு நடத்தவில்லை. அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் இந்தியா இங்கு கூடுதல் படைகளை களமிறக்கி உள்ளது. அதன்பின் சீனா அங்கிருந்து மொத்தமாக பின்வாங்கி உள்ளது.

    பழி போடுகிறது

    பழி போடுகிறது

    இந்த தகவலை மறைத்து இந்தியா மீது சீனா குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. முழுக்க முழுக்க இந்தியா மீது குற்றம் என்பது போல சீனா பேசி வருகிறது. இதற்கு இந்தியா இன்னும் பதிலடி கொடுக்கவில்லை. முறையாக அறிக்கை விரைவில் இந்திய ராணுவம் அல்லது வெளியுறவுத்துறை சார்பாக வெளியிடப்படும். அதில் அனைத்து உண்மைகளும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+