இந்தியாதான் லடாக்கில் அத்துமீறுகிறது.. விரைவில் உரிய நடவடிக்கை எடுப்போம்.. சீனா பாய்ச்சல்!
லடாக்: லடாக்கில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும், உரிய எதிர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது. லடாக்கில் நடக்கும் மோதலுக்கு இந்தியாவை சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.
Recommended Video
லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோ பனி ஏரிதான் தற்போது கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. 4200 மீட்டர் உயரத்தில் இருக்கும் மலையில் அமைந்துள்ள இந்த நதியின் இரண்டு முனைகளிலும் 8 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது.
இதில் 4 கட்டுப்பாட்டு பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், நான்கு சீனாவின் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. இதில் இந்தியாவின் நான்கு கட்டுப்பாட்டு பகுதிகளில்தான் சீனா அடிக்கடி அத்துமீற தொடங்கி உள்ளது.

ஆனால் என்ன
என்னதான் எல்லையில் சீனா அத்துமீறினாலும், தொடர்ந்து சீனா இந்தியாவைதான் இதில் குற்றஞ்சாட்டி வருகிறது. நாங்கள் எல்லையில் எங்கும் அத்துமீறவில்லை. லடாக்கில் எங்கும் சீனா எல்லை மீறவில்லை . இந்தியாதான் சீனாவை சீண்டும் வகையில் செயல்படுகிறது. இந்தியாதான் சீனாவை தூண்டி விடுகிறது. இந்தியாதான் எல்லையில் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது என்று சீனா கூறியுள்ளது.

ஒருபடி மேலே
அதோடு ஒருபடி மேலே போய் லடாக்கில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும், உரிய எதிர் நடவடிக்கை எடுக்கப்படும். சீன ராணுவம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவின் எல்லையில் இந்தியா அத்துமீறி உள்ளது. சீனாவின் இறையாண்மைக்கு எதிராக இந்தியா செயல்பட்டுள்ளது. என்று, சீனா இந்தியாவிற்கு எதிராக பேசியுள்ளது.

சீனா ஏன் இப்படி
ஒரு பக்கம் சீனா இப்படி இந்தியா மீது பழியை போட்டாலும், இன்னொரு பக்கம் லடாக் எல்லையில் தீவிரமாக ஆயத்த பணிகளை செய்து வருகிறது. இந்தியா - பூட்டான் - சீனா எல்லையில் இருக்கும் டடோகா லா ப்குதியிலும், நாகு லா பகுதியிலும் சீனா படைகளை குவித்து வருகிறது. அங்கு சீனா ஹெலிகாப்டர் தளம் ஒன்றையும் அமைத்து உள்ளது. ரகசியமாக இதற்கான கட்டுமான பணிகளை சீனா செய்து வருகிறது.

ஏவுகணை எப்படி
இதற்கு அருகிலேயே சீனா ஏவுகணை தளம் ஒன்றையும் அமைத்து வருகிறது. இங்கிருந்து 50 கிமீ தூரத்தில் ஏவுகணை தளம் அமைக்கும் பணிகளை சீனா செய்து வருகிறது. இங்கும் நவீன ஆயுதங்களை சீனா களமிறக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியா மீது பழியை போட்டுவிட்டு சத்தமே இல்லாமல் இன்னொரு பக்கம் போருக்கான ஆயத்தங்களை சீனா செய்து வருகிறது.

எப்படி
அதேபோல் பாங்காங் திசோ நதி இருக்கும் பகுதியில் புதிய படகுகளை சீனா இறக்கி உள்ளது. வேகமாக செல்லும், வீரர்களை களமிறக்க உதவும் படகுகள் களமிறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 படகுகள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 படகுகளை சீனா களமிறக்கி உள்ளது. சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இங்கு இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது.











Click it and Unblock the Notifications