இந்திய எல்லையில் பாகிஸ்தான் படையினருக்கு பயிற்சி அளிக்கும் சீனா ராணுவம்- திடுக் தகவல்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினருக்கு சீனா ராணுவத்தினர் பயிற்சிகள் அளித்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரத்தின் ரஜோரி சர்வதேச எல்லைப் பகுதியில் சீனாவின் நடமாட்டம் குறித்து எல்லை பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு அறிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
அந்த அறிக்கையில், இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ படையின் சிறப்புப் பிரிவு சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் ஜம்மு காஷ்மீருக்குள் சட்டசபை தேர்தலின் போது ஊடுருவுவதற்காக காத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
ரஜோரி செக்டாரின் சர்வதேச எல்லைப் பகுதியில் சீனா ராணுவத்தினர் பாகிஸ்தான் படையினருக்கு பயிற்சிகள் அளித்தும் வருகின்றனர்.
இந்திய நிலைகளைக் கண்காணிப்பதற்கான புதியதாக 2 கண்காணிப்புக் கோபுரங்களை அபோகர் மற்றும் குருதாஸ்பூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications