'ரைட்மேக்ஸ்' சிட்பண்ட் மோசடி... ஒடிஷா, தமிழகத்தில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு
புவனேஸ்வர்/ கோவை: ரைட்மேக்ஸ் சிட்பண்ட் நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக ஒடிஷா மற்றும் தமிழகத்தின் கோவையில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி ரெய்டு நடத்தினர்.
மேற்கு வங்கம், ஒடிஷாவில் சாராத சிட் பண்ட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பொதுமக்களிடம் பெருமளவு பணத்தை வசூலித்துவிட்டு பின்னர் அறிவித்தபடி பொதுமக்களுக்கு திருப்பிக் கொடுக்காமல் பல நூறு கோடி ரூபாயை மோசடி செய்தன. இதில் சாரதா சிட் பண்ட் நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது.

இப்படி பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களும் கொள்ளையடித்த கதைகளை அம்பலப்படுத்தியது சாரதா சிட் பண்ட் மோசடி. அதேபோல் ஒடிஷாவில் அடுத்தடுத்து சிட் பண்ட் மோசடிகள் அம்பலமாகின.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மொத்தம் 44 சிட் பண்ட் நிறுவனங்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனடிப்படையில் ரைட்மேக்ஸ் என்ற சிட் பண்ட் நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாகவும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிறுவனத்தில் ரவீந்தரநாத் ஜெனா, வி. லாகனயா, ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். இந்த இயக்குநர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
ஒடிஷா மற்றும் தமிழகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் கோவையில் 4 இடங்களில் இந்த ரெய்டை சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கொண்டனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications