Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி யாருக்கும் சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்யும் யோசனையே வராது! அப்படியொரு தண்டனை தந்த கோர்ட்

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் சீட்டு நிறுவனம் நடத்தி ஏமாற்றிய நிதி நிறுவனத்தின் இயக்குனருக்கு 170 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறைந்த முதலீட்டில் அதிக வட்டி தருவதாக கூறி பணத்தை வசூலித்து விட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றி விட்டதாக அவ்வப்போது புகார்கள் வெளிவருவதை காண முடிகிறது. உரிய அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தால் மட்டுமே பணத்திற்கு பாதுகாப்பு என்று அவ்வப்போது அரசு அறிவுரை மற்றும் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் அதிக வட்டி, அதிக லாபம் என ஆசை வார்த்தைகளை நம்பி போலியான நிதி நிறுவனங்களிள் வலையில் சில அப்பாவி மக்கள் மாட்டிக்கொள்வது தங்கள் வாழ்நாள் சேமிப்பை பறி கொடுக்கும் போக்கு சில இடங்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

 chit fund scam in Madhya Pradesh Director of a chit fund company jailed for 170 years

சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின மக்களிடம் பணத்தை பெற்று விட்டு ஏமாற்றி சென்ற நிதி நிறுவனத்தின் இயக்குனருக்கு அங்குள்ள மாவட்ட நீதிமன்றம் 170 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது குறித்த செய்தியை பார்க்கலாம். மத்திய பிரதேசத்தில் சாய் பிரசாத் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக பாலா சாஹேப் பப்கர் இருந்து வந்தார்.

கவர்ச்சிகர விளம்பரம்: இந்த நிலையில்தான், அங்குள்ள ஆதிவாசி சமூகத்தினரிடம் பணத்தை முதலீடு செய்தால் இரண்டு மடங்காக திருப்பி அளிப்பபதாக கவர்ச்சிகர விளம்பரங்களை செய்துள்ளனர். இதை நம்பி பழங்குடியின மக்களும் தங்கள் சேமிப்பு தொகையை சாய் பிரசாத் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளர். 31 பேரிடம் சுமார் ரூபாய் 1.40 கோடி வரை பணம் வசூலித்து இருக்கிறார்கள்.

வெறும் ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு பணம் கொடுப்பதாக கூறி பணத்தை நிதி நிறுவனம் வசூலித்து இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் 2 லட்சமாக தருகிறோம் என பழங்குடியின மக்களை ஏமாற்றி பணத்தை வாங்கியுள்ளனர். 2012-2015 வரை இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. எனினும், ஐந்து ஆண்டுகள் கழித்து பணத்தை முதலீடு செய்த பழங்குடியின மக்கள் இரண்டு மடங்கு பணத்தை வாங்கிவிடலாம் என்ற கனவுகளுடன் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.

170 ஆண்டுகள் சிறை: ஆனால், நிறுவனம் பூட்டப்பட்டு கிடந்தது. பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்த பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்ட விஷயம் பழங்குடியின மக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, முதலீட்டாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்க்குப்பதிவு செய்தனர். இது தொடர்பன வழக்கு அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணையில், சாய் பிரசாத் நிறுவனம் முதலீட்டாளர்களை ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் இயக்குனர் பாலா சாஹேப் பப்கருக்கு 170 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முதலீட்டாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+