சீனாவில் இல்லை.. என் உடலில் இருந்து வந்ததுதான் கொரோனா.. மார்ச் மாதம் இருக்காது.. பத்மஜா பகீர் தகவல்
சித்தூர்: கொரோனா பரவியதற்கு காரணம் சீனா இல்லை, நான் தான் பரப்பினேன் என்றும் நான் மனித உருவில் உள்ள கொரோனா என்றும் சித்தூரில் நரபலி கொடுத்த பத்மஜா தெரிவித்துள்ளார்.
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வந்தவர்கள் புருஷோத்தம் நாயுடு- பத்மஜா தம்பதி. இதில் புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும் பத்மஜா தனியார் கல்லூரி நிறுவனத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

கருவி
அவர்களின் மூத்த மகள் அலெக்கியா (27) மேனேஜ்மென்ட் ஆப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (22) ஏ.ஆர். ரஹ்மானின் இசை கல்லூரியில் பயின்று வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரையும் உடற்பயிற்சி செய்யும் கருவியால் தலையில் அடித்து பெற்றோரே கொன்றுள்ளனர்.

கொரோனா வைரஸ்
பின்னர் அவர்களை நிர்வாணப்படுத்தி பூஜை அறையில் வைத்து ஏதோ பூஜை செய்துள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸார் விசாரணை நடத்திய போது அவர்களை பார்த்து பத்மஜா கூச்சலிட்டுள்ளார். பின்னர் நான்தான் சிவன். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வரவில்லை.

மனித உருவில் இருக்கும் கொரோனா
எனது உடல் பாகத்திலிருந்து வந்தது. நான் மனித உருவில் இருக்கும் கொரோனா. வரும் மார்ச் மாதம் கொரோனா போய்விடும். தடுப்பூசியெல்லாம் போட்டுக்காதீங்க என கூறிய பத்மஜாவை சமாதானப்படுத்த புருஷோத்தமன் முயன்ற போது என்னை தொடாதே நீ இப்போது என் கணவர் இல்லை. நான் சிவன் என கூறியுள்ளார்.

முட்டாள் இல்லை
மேலும் அவர் கூறுகையில் எங்கள் மகள்களின் உடலில் தீயசக்தி சென்றுவிட்டது. அதை கொல்வதற்காகத்தான் இப்படி செய்தோம். தீயசக்தி இருந்ததால்தான் அவர்கள் உடனே இறக்காமல் பல மணி நேரமாக இழுத்துக் கொண்டு கிடந்தார்கள் என்றார். அப்போது புருஷோத்தமன் கூறுகையில் நான் ஒன்றும் முட்டாள் இல்லை, பிஎச்டி முடித்தவன். எங்களுக்கு தகவல் வந்தபடி செய்தோம் என சர்வசாதாரணமாக கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications