ஆந்திராவில் பயங்கரம்.... சித்தூர் மேயர் அனுராதா மற்றும் அவரது கணவர் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை!
சித்தூர்: ஆந்திராவின் சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா மர்ம நபர்களால் இன்று பிற்பகல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவரது கணவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
சித்தூர் மாநகராட்சி மேயராக தெலுங்கு தேசம் கட்சியின் அனுராதா பதவி வகித்து வந்தார். சித்தூரில் இன்று தமது அலுவலகத்தில் அவர் இருந்த போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்துள்ளனர்.'

அவர்களை அனுராதாவின் கணவர் மோகன் தடுத்துள்ளார். அப்போது மோகனை அந்த கும்பல் கத்தியால் குத்தியது. பின்னர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த மோகன் நிலைகுலைந்து போனார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள், அனுராதாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் அனுராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு குண்டு காயங்களுடன் படுகாயமடைந்த கணவர் மோகன் ஆபத்தான நிலையில் தமிழகத்தின் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications