For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியுரிமை சட்டத்துக்கும் இந்திய முஸ்லீம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. தலைமை இமாம் பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கும் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என டெல்லி ஜும்மா மசூதி தலைமை இமாம் அஹமத் புகாரி தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களாலும் மற்ற தூண்டுதல்களாலுமே அஸ்ஸாம் குடிமக்கள் தேசிய பதிவேடு இன்னும் சட்டமாக மாறவில்லை என்று நினைவு படுத்தினார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது.இந்த போராட்டத்தை கைவிடக்கோரி மத்திய அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனாலும் இதுவரை போராட்டங்கள் கைவிடப்படவில்லை.

கமல் எனக்கு போன் செய்தார்.. குடியுரிமை சட்டம் குறித்து பேசினோம்.. பின்னணியை உடைத்த ஸ்டாலின்!கமல் எனக்கு போன் செய்தார்.. குடியுரிமை சட்டம் குறித்து பேசினோம்.. பின்னணியை உடைத்த ஸ்டாலின்!

இமாம் வேண்டுகோள்

இமாம் வேண்டுகோள்

இந்தியாவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான ஜும்மா மஸ்ஜித்தின் உயர்மட்ட மதகுரு இமாம் அஹமத் புகாரி, டெல்லியின் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை வன்முறைக்குப் பின்னர் கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும் என்று தனது வேண்டுகோளை முன்வைத்தார்.

மாணவர்கள் காயம்

மாணவர்கள் காயம்

முன்னதாக போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதிக்கொண்ட சம்பவத்தால் காவல்துறையினர் கல்லூரி வளாகத்தில் வைத்து தாக்கியதில் பல மாணவர்கள் காயமடைந்தனர், மேலும் 100 மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

யாரும் தடுக்க முடியாது

யாரும் தடுக்க முடியாது

இந்நிலையில் டெல்லி ஜும்மா மசூதி தலைமை இமாம் அஹமத் புகாரி பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எதிர்ப்பு தெரிவிப்பது இந்திய மக்களின் ஜனநாயக உரிமை, அதைச் செய்வதை யாரும் தடுக்க முடியாது. இருப்பினும், இது கட்டுப்பாட்டுடன் செய்யப்படுவது முக்கியம், நமது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியமானது.

சம்பந்தம் இல்லை

சம்பந்தம் இல்லை

குயுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு உள்ளது. ஒன்று சிஏஏ ஒரு சட்டமாக மாறியுள்ளது, மற்றொன்று என்ஆர்சி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது, அது ஒரு சட்டமாக மாறவில்லை. சிஏஏ கீழ் , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இந்தியாவுக்கு வரும் முஸ்லீம் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்காது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை "என்று இமாம் அஹமத் புகாரி கூறினார்.

English summary
delhi's jama masjid shahi imam says Citizenship Law has nothing to do with Muslims living in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X