கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதை கொண்டாடிய மாணவர்களால் ஸ்ரீநகர் என்.ஐ.டியில் மோதல்
ஸ்ரீநகர்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலக கோப்பை டி20 அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலுளள தேசிய டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் (என்.ஐ.டி) மாணவர்கள் நடுவே மோதல் வெடித்தது. இதனால், என்.ஐ.டி மூடப்பட்டிருந்தது.
இந்திய அணி தோற்றபோது, பல்கலைக்கழகத்திற்குள் இருந்த காஷ்மீர் மாநில மாணவர்களில் பலர் அதை கொண்டாடியுள்ளனர். ஏற்கனவே தோல்வி விரக்தியில் இருந்த பிற மாநில மாணவர்களுக்கு, காஷ்மீர் மாணவர்கள் கொண்டாட்டம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இரு தரப்பு மாணவர்களும் மோதிக்கொண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மீது மாணவர்களில் ஒரு பிரிவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களை கலையச் செய்தனர்.
மோதலையடுத்து இன்ஸ்டிடியூட்டோடு, மாணவர் விடுதிக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டிடியூட்டின் பதிவாளர் பயாஸ் அகமது மிர் தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் மாணவர்கள் கோஷமிட்ட சர்ச்சை ஓய்வதற்குள், காஷ்மீர் கல்வி நிலையத்திலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications