ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை.. தர்மசாலாவில் மேக வெடிப்பு... விடாது கொட்டிய மழையால் முடங்கிய வாழ்க்கை
விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் தர்மசாலாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித்தீர்த்தது. பெருவெள்ளம் காரணமாக சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன.

தென்மேற்குப் பருவமழை 10ஆம் தேதி முதல் வட மாநிலங்களில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் கணித்திருந்தது. நாட்டின் மிகமுக்கியமான சுற்றுலா தலமாக திகழும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இடை விடாமல் கொட்டித்தீர்த்த கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.
அங்குள்ள தர்மசாலாவில் மேக வெடிப்பு ஏற்பட்டு சிலமணிநேரங்களில் கொட்டித்தீர்த்த அதீத கனமழையால் பெருவெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளநீரில் இழுத்துச்செல்லப்பட்டன.
கடும் மழை வெள்ளத்தால் சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் ஜாக்ரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சமவெளி மற்றும் நடு மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கையும், ஜூலை 14 மற்றும் 15 ஆம் தேதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கையும் இந்திய வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் என்றும் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரிக்கும் என்பதால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என்றும் சிம்லா வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications