கொடுமை.. சொந்த தம்பியை.. கொரோனாவுக்கு பறி கொடுத்த மம்தா.. ஒரு மாத போராட்டத்தின் இறுதியில்.. மரணம்!
மம்தா பானர்ஜி தம்பி கொரோனாவுக்கு பலியானார்
கொல்கத்தா: மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் தம்பி உயிரிழந்துள்ளார்.. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென இன்று அவர் உயிரிழந்துள்ளார்..
இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது.. அதுபோலவே உயிரிழப்பும் அதிகமாகி வருகிறது.. நேற்று மட்டும் 3,26,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்... காரணம், இந்த 2வது அலை மிக வேகமாக பரவி வருவதுதான்.
பல மாநிலங்களில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளும், மரணங்களும் ஏற்பட்டு வருவது, மக்களை நிலைகுலைய செய்து வருகிறது..

மேற்கு வங்கம்
இதில், வடமாநிலங்கள்தான் முன்னிலையில் உள்ளன.. அந்த வகையில் மேற்கு வங்கத்திலும் பாதிப்பு அதிகம் உள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் 138 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதன் மூலம், வங்காளத்தில் தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு 100-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடந்து வருகின்றன.

கடிதம்
எனவேதான், பிரதமர் மோடிக்கு, அம்மாநில முதல்வர் மம்தா நேற்றுகூட ஒரு கடிதம் எழுதியிருந்தார். "மேற்கு வங்க மாநில ஆஸ்பத்திரிகளுக்கு பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்திக்கூடங்களை வழங்குவதற்கு மத்திய அரசு யோசிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது... ஆரம்பத்தில் எங்களுக்கு 70 பிஎஸ்ஏ உற்பத்திக்கூடங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டநிலையில், தற்போது முதல்கட்டமாக 4 மட்டும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மீதி எப்போது தருவீர்கள் என்று தெரியவில்லை..

காலமானார்
இது தொடர்பான முன்னுரிமைகள், செயல்படுத்தும் முகமைகள், ஒதுக்கீட்டு அளவில் நேர்மை, நியாயம், வேகம் வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த அளவுக்கு மேற்கு வங்க நிலைமை மோசமாகி உள்ள சூழலில், மம்தாவின் தம்பியே கொரோனாவுக்கு இன்று உயிரிழந்துள்ளார். இவரது பெயர் ஆஷிம் பானர்ஜி.. கடந்த ஒரு மாதமாகவே இவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்..

அதிர்ச்சி
ஆனால், தீவிர சிகிச்சை பெற்றும் பலனின்றி இன்று காலை 9-20 மணிக்கு உயிர் பிரிந்துவிட்டது. இதையடுத்து, கொரோனா நெறிமுறைக்கு இணங்க அவரது இறுதி சடங்குகள் இன்று பிற்பகல் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.. மம்தா பானர்ஜியும், இவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்துள்ளனர். ஒரு மாநில முதல்வரின் தம்பியே கொரோனாவுக்கு பலியாகி உள்ளது, பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications