சித்தராமையா குறித்து 'வாட்ஸ்அப்'பில் கேலி, கிண்டல்... தலைமறைவாக உள்ள 2 இளைஞர்களுக்கு போலீஸ் வலை
பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் அவதூறான வாசகங்களை வாட்ஸ்அப்பில் பகிர்ந்த இளைஞர்கள் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெல்ஜியம் சென்றிருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷ் கடந்த 30-ம் தேதி உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். இதனால் பெரும்

துயரத்தில் இருந்த சித்தராமையா கண்ணீர் சிந்தி அழுதார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்கள் மற்றும் 'வாட்ஸ்அப்'பில் வெளியாகின.
இதனிடையே ரெய்ச்சூர் மாவட்டம் சாந்தேகலூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் (25) என்பவர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தை கேலி செய்யும் வகையில்
அவதூறான வாசகங்களை இணைத்து வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜுலை 31-ந் தேதி நடந்துள்ளது.
நவீன் வாட்ஸ்அப் குழுவில் சித்தராமையா குறித்து சர்ச்சைக்குரியவற்றை பகிர்ந்த நிலையில், அது தொடர்பாக லிங்காசுகார் பகுதியில் உள்ள ஷரன்பாசவா
(26) என்பவரும் அதற்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் அனுப்பியுள்ளாராம். கடயப்பா கவுடா என்பவர் அந்த செய்திகளை படித்துள்ளார். இதையடுத்து, கடயப்பா
கவுடா, முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய அவர்கள் 2 பேரின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் முதல்வர் சித்தராமையாவை கேலி செய்து அவதூறான வகையில் புகைப்படம் மற்றும் செய்தியை அனுப்பிய இரு இளைஞர்கள் மீதும் ரெய்ச்சூர்
போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள நவீன் மற்றும் ஷரன்பாசவா ஆகிய 2 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications