"நரேந்திர மோடிக்கு" வாக்களியுங்கள் என பிரசாரம் செய்த காங்கிரஸின் சித்தராமையா
நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என்று வாய் தவறி காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா பிரசாரம் செய்தார்.
பெங்களூர்: காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திர சுவாமிக்கு வாக்களியுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என சித்தராமையா பிரசாரம் செய்தார்.
கர்நாடகத்தில் வரும் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் காரசாரமான விவாதங்களுடன் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சித்தராமையா உள்ளிட்டோர் தேர்த்ல பிரசாரத்தில் பிஸியாக உள்ளனர். இந்நிலையில் இன்று மலாவல்லி தொகுதியில் சித்தராமையா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

குடிநீர் விநியோகம்
அப்போது அவர் அத்தொகுதி வேட்பாளர் நரேந்திர சுவாமி கடந்த 2008 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் எம்எல்ஏவாக இருந்த போது அவர் ஆற்றிய பணிகள் குறித்து பேசினார். அனைத்து கிராமங்களிலும் சாலை பணிகள், குடிநீர் விநியோகம், வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் அனைத்தையும் நரேந்திர மோடிதான் செய்தார் என்றார்.

மோடி கற்பனையானவர்
நரேந்திர சுவாமி என்பதற்கு பதில் நரேந்திர மோடி என கூறியதை கேட்டு அங்கிருந்த மக்கள் சிரித்து கொண்டிருந்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள் சித்தராமையாவிடம் சென்று கூறியதை அடுத்து நரேந்திர சுவாமியால் செய்யப்பட்ட பணிகள் என்று சரி செய்து கூறினார். இதில் முக்கியமான வார்த்தையே நரேந்திர ஆகும். சுவாமி இங்கிருக்கிறார். மோடியோ குஜராத்தில் இருக்கிறார். நரேந்திர மோடி கற்பனை, நரேந்திர சுவாமி உண்மையானவர் என்று கூறி சமாளித்தார்.

மீண்டும் மோடியின் பெயர்
இதன் பின்னர் மற்றொரு பெரிய தவறையும் சித்தராமையா வாய் தவறி சொல்லி செய்துவிட்டார். அதாவது நீங்கள் அளிக்கும் வாக்குகளை பரிசீலனை செய்து நரேந்திர மோடிக்கு எனக்கும் அளியுங்கள் என்று மீண்டும் மோடியின் பெயரை கூறிவிட்டார். இதுவும் கட்சி நிர்வாகிகளால் மீண்டும் சரி செய்யப்பட்டது.

எடியூரப்பாவை "பழித்த" அமித்ஷா
இதேபோல் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மிகவும் ஊழலுள்ள அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால் எடியூரப்பாதான் முதலில் வருவார் என்று கூறிவிட்டார். அப்போது அமித்ஷாவுக்கு அருகிலேயே எடியூரப்பா அமர்ந்திருந்தார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள் அமித்ஷாவின் தவறை அவருக்கு உணர்த்தியது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடகா: சிப்பி சேகரிக்க ஆற்றில் இறங்கியபோது நேர்ந்த துயரம்! பறிபோன 8 உயிர்கள்! பிரதமர் இரங்கல்! -
டிகே சிவக்குமார் சொன்ன வார்த்தை.. முதல்வர் விஜய் இப்போதாவது வாய் திறப்பாரா? பாய்ந்து வந்த கேஎன் நேரு -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
தண்ணீருக்கு பதிலாக டீசல்.. மங்களூர் கிணற்றில் இரைக்க இரைக்க வந்த எரிபொருள்? கடைசியில் ட்விஸ்ட் -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
வெள்ளை மாளிகைக்கு வாங்க.. பிரதமர் மோடிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு! உற்று நோக்கும் சீனா! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு!












Click it and Unblock the Notifications