For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் மேயருக்கு "பக்"குனு குத்து விட்ட கர்நாடக முதல்வர்- வைரலாகும் வீடியோ

கராத்தே வீராங்கனையும், மங்களூர் மேயருமான கவிதா சனீலை ஒரு பஞ்ச் கொடுத்து இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளை கர்நாடக முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மங்களூர்: மங்களூரில் இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளை துவக்கி வைத்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மங்களூர் மேயர் கவிதா சனீலை ஒரு பஞ்ச் கொடுத்து துவக்கி வைத்தார். கவிதா சனீல் கராத்தேவில் பிளாக் பெல்ட்டாக்கும்.

இந்திய கராத்தே சாம்பியன் போட்டி 2017 மங்களூரில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டிகளை முதல்வர் சித்தராமையா கடந்த சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் மங்களூர் மேயரும், கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவருமான கவிதா சனீல் கலந்து கொண்டார். அப்போது சித்தராமையா பேசுகையில், கவிதா சனீல் ஒரு கராத்தே சாம்பியன் என்பது எனக்கு தெரியும்.

இக்கட்டான சூழ்நிலைகள் நேரும் போது அனைத்து மகளிரும் கவிதாவை போல் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. தற்காப்பு கலைகள் மக்களை மேம்படுத்த உதவும், அதுவும் குறிப்பாக பெண்களை மேம்படுத்தும் என்பதால் அவற்றை கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த விழாவை தொடங்கி வைக்க மேயர் கவிதா என்னை தனிப்பட்ட முறையிலும், அமைச்சர் ராம்நாத் ராய் மூலமாகவும் கேட்டுக் கொண்டார் என்றார். இதைத் தொடர்ந்து விழாவை தொடக்கி வைத்தபோது கவிதாவை சிறிய கராத்தே மூவ்மென்ட்டை செய்து காண்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அப்போது முதல்வருக்கு கற்றுக் கொடுப்பதற்காக அவருக்கு ஒரு லேசான பஞ்ச் விட்டார். பின்னர் பதிலுக்கு சித்தராமையாவும் கவிதாவுக்கு ஒரு பஞ்ச் கொடுத்தார்.

English summary
Karnataka chief minister Siddaramaiah and Mangaluru mayor Kavitha Sanil mocked karate moves at the inauguration of the Indian Karate Championship 2017 in Mangaluru on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X