மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழகத்துக்கு உரிமையில்லை: கர்நாடக முதல்வர் திட்டவட்டம்
பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழகத்துக்கு உரிமையில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தியும், தடுக்கும், தமிழகத்தை கண்டித்தும், பல்வேறு கன்னட அமைப்புகள் இணைந்து கர்நாடகாவில் இன்று பந்த் நடத்தின. இதனிடையே, நூற்றுக்கணக்கான கன்னட அமைப்பினர் ஒன்றிணைந்து, பெங்களூரு டவுன்ஹால் முதல், ஃப்ரீடம்பார்க் வரையில் ஊர்வலமாக சென்று தங்களது ஒற்றுமையை காண்பித்தனர்.

சுமார் மூன்று மணி நேரம் நடந்த பேரணியில் கன்னட நடிகர் புனித்ராஜ்குமார், கர்நாடக கவிஞர்கள் பலரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
இதன்பிறகு முதல்வர் சித்தராமையாவை அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் கன்னட குழு சந்தித்து ஒரு மனு அளித்தது.
அந்த மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் அளித்த பேட்டி: கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க சட்ட பிரச்சினை எதுவும் கிடையாது. சட்டத்தில் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகம் தனது நீர் தேவைக்காக அணை கட்டுவதை தடுக்க தமிழகத்துக்கு உரிமை கிடையாது.
கர்நாடக அரசுக்கு, நீங்கள் (கன்னட அமைப்புகள்-மக்கள்) ஆதரவு கொடுத்துள்ளதற்கு நன்றி. உங்களது விருப்பப்படியே அரசு செயல்படும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications