நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு- பிரதமரை சேர்க்கக் கோரும் மனு தள்ளுபடி
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங்கை சேர்க்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன் இந்த வழக்கின் விசாரணைக்காக கூடுதல் அதிகாரியை சேர்த்துக் கொள்ள சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் சிபிஐ அண்மையில் தாக்கல் செய்த அறிக்கை மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் அதிகாரியை சேர்த்துக் கொள்ளவும் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் பிரதமரை நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சேர்க்கக் கோரி ஒரு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. அதாவது ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு நிலக்கரி உரிமம் வழங்கப்பட்டது தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் குமாரமங்கலம் பிர்லா , முன்னாள் நிலக்கரி துறைச்செயலாளர் பரேக் உள்ளிட்ட சிலர் மீது கடந்த சில வாரங்களுக்கு முன் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இதனையடுத்து நிலக்கரிதுறைச்செயலாளர் பரேக் தான் குற்றவாளி என்றால் அத்துறையை வைத்திருந்த பிரதமரும் குற்றவாளியே என்றும் அவருக்கு தெரியாமல் எந்த ஒரு கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.பிரதமரும் சிபிஐ விசாரணைக்கு தயார் என்றும் தான் எதையும் மறைக்க வில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதனால் பிரதமர் மன்மோகன்சிங்கையும் நிலக்கரி ஊழல் வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும் இன்று விசாரித்த நீதிபதிகள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங்கை சேர்க்க முடியாது என்று மறுத்ததுடன் மனுவை தள்ளுபடி செய்தனர்
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications