ஒரு செல்போனுக்காக உயிரை விடுவதா.. என்ன கொடுமை இது!

செல்போனுக்காக துப்பாக்கியால் சுட்டு கொண்டு உயிரை விட்டுள்ளார் ஒரு மாணவன்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் தலைபோற எவ்வளவோ பிரச்சனை இருக்கு... அங்கங்கே சாப்பாட்டுக்கே வழி இல்லாம, சரியான வேலை இல்லாம, ஒவ்வொரு நாளையும் மக்கள் ரணகளத்தோடு ஓட்டி வரும் நிலையில், ஒரு செல்போனுக்காக சண்டை போட்டுக்கிட்டு, அதுக்காக இளைஞர் ஒருவர் உயிரை விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் துவாரகா பகுதி அருகே பிந்தாபூர் என்னும் இடம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் ரன்பீர் சிங் என்பவர். இவருக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள். மகன் பெயர் குல்ஷன் ஷெராவத். 17 வயதாகும் ரன்பீர், ஒரு தனியார் கல்லூரியில் முதல் வருடம் படித்து வருகிறார்.

செல்போனுக்கு தகராறு

செல்போனுக்கு தகராறு

இவருக்கும் இவரது தங்கைக்கும் சனிக்கிழமை இரவு ஒரு சண்டை வந்திருக்கிறது. அது செல்போனுக்கான சண்டை. இருக்கும் ஒரே ஒரு செல்போனை யார் பயன்படுத்துவது என்பது தொடர்பாக தகராறு வந்திருக்கிறது. அதனால் செல்போனை ஆளுக்கு பக்கம் பிடித்து இழுத்துக் கொண்டு சண்டை போட்டிருக்கிறார்கள்.

நொறுங்கிய செல்போன்

நொறுங்கிய செல்போன்

இதில் குல்ஷன் செல்போனை ஒரே பிடுங்காக பிடுங்கி கீழே போட்டு உடைத்தான். இதில் செல்போன் தூள் தூளாக நொறுங்கியது. உடைத்த கையோடு விருட்டென்று அந்த ராத்திரி நேரத்தில் வெளியே கோபமாக சென்று விட்டான். கோபத்தில் சென்றிருக்கிறான்... வந்துவிடுவான் என்றுதான் பெற்றோர் நினைத்தார்கள்.

பரிதாப மரணம்

பரிதாப மரணம்

இந்த நிலையில் நேற்று காலை 6.15 மணி இருக்கும். அப்போது குல்‌ஷன் தன் வீட்டு வாசற்படியிலயே கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தான். இதனை கண்டு பதறிய பெற்றோர் குல்ஷனை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். ஆனாலும் வழியிலேயே குல்ஷன் பரிதாபமாக உயிரிழந்தான்.

4 தோட்டாக்கள் பறிமுதல்

4 தோட்டாக்கள் பறிமுதல்

இதுபற்றி கூறிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், "சிறுவன் தன் கழுத்தின் மீது துப்பாக்கியை அழுத்தி சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறான். அவன் பயன்படுத்திய நாட்டு கைத்துப்பாக்கியும், பயன்படுத்தப்படாத 4 தோட்டாக்களும் கைப்பற்றி உள்ளோம்" என்றார்.

இவ்வளவு ஆத்திரமா?

இவ்வளவு ஆத்திரமா?

செல்போனுக்காக சண்டையா? செல்போனுக்காக தற்கொலையா? ரொம்ப வயித்தெறிச்சலான சம்பவம் இது! இந்த வயசிலேயே கட்டுக்கடங்காத கோபமும், அடக்க முடியாத ஆத்திரமும் எங்கு கொண்டு போய் விட போகிறதோ இது போன்ற மாணவர்களை!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+