மத மோதல் தடுப்பு மசோதாவில் சில பகுதிகள் நீக்கம்- இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்!
டெல்லி: மத மோதல் தடுப்பு மசோதாவில் சர்ச்சை பகுதிகள் நீக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
மத மோதல்களைத் தடுக்கும் நோக்கத்துக்காக மத்திய அரசு மத மோதல் தடுப்பு மசோதாவை தயாரித்தது. முதலில் தயாரிக்கப்பட்ட இந்த மசோதாவில் கலவரத்துக்கு பொறுப்பு பெரும்பான்மை சமுதாயத்தையே சாரும் என்று இருந்தது. இதற்கு பாரதிய ஜனதா உள்பட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இதனைத் தொடர்ந்து இதில் திருத்தம் செய்து இப்போது, அனைத்து சமுதாயங்களுக்கும் சமமான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல முதலில், கலவர சமயங்களில் மத்திய அரசு துணை ராணுவப்படையை எந்த ஒரு மாநிலத்துக்கும் அந்த மாநில அரசின் ஆலோசனையை பெறாமலேயே அனுப்ப அதிகாரம் வழங்குவதாக இருந்தது. இதற்கு பாரதிய ஜனதா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பலத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து இப்போது அதுவும் திருத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவி தேவைப்படுவதாக கருதி மாநில அரசு கருத்து தெரிவித்தால் மட்டுமே அந்த மாநிலத்துக்கு துணை ராணுவப்படையை மத்திய அரசு அனுப்பும் என்று மாற்றப்பட்டுள்ளது.
நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் திருத்தப்பட்ட மத மோதல் தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனால் இன்று நாடாளுமன்றத்தில் இம் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications