மோடி ஆட்சியில் மதக் கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.. சோனியா கடும் தாக்கு
திருவனந்தபுரம்: கேரள மாநில காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் சோனியா காந்தி பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடிப் பேசினார். பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே நாட்டில் மதக் கலவரங்கள் அதிகரித்து விட்டன. திட்டமிட்டு இதை பாஜகவினர் நடத்துவது போல தெரிகிறது. மோடி இதை வேடிக்கை பார்க்கிறார். இதுவரை 600 கலவரங்களுக்கு மேல் நடந்துள்ளது. மக்களை் பிரித்து பார்க்கிறது பாஜக என்று அவர் கடுமையாக சாடிப் பேசினார்.

கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் சோனியா காந்தி பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடிப் பேசினார். பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே நாட்டில் மதக் கலவரங்கள் அதிகரித்து விட்டன. மோடி இதை வேடிக்கை பார்க்கிறார். இதுவரை 600 கலவரங்களுக்கு மேல் நடந்துள்ளது. மக்களை் பிரித்து பார்க்கிறது பாஜக என்று அவர் கடுமையாக சாடிப் பேசினார்.
மக்களை மத ரீதியாக, ஜாதி ரீதியாக பிரிப்பதே பாஜகவின் திட்டம் என்றும் குற்றம் சாட்டினார் சோனியா காந்தி.
திருவனந்தபுரத்தில் கேரள மாநில காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் கட்சியினர் மத்தியில் சோனியா காந்தி இன்று பேசினார்.
அவரது பேச்சிலிருந்து....
மோடி ஆட்சிக்கு வந்த 11 வார காலத்திற்குள்ளாகவே நாடு முழுவதும் 600 மதக் கலவரங்கள் நடந்துள்ளன. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இப்படி நடந்ததே இல்லை.
ஏன் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் மதக் கலவரங்கள் அதிகரித்துள்ளன என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால் இவையெல்லாம் வேண்டும் என்றே திட்டமிட்டு நடத்தப்படுவதாக நான் சந்தேகிக்கிறேன். மக்களை அவசரம் அவசரமாக பாஜக அரசு பிரிப்பதாக நான் சந்தேகப்படுகிறேன்.
மதச்சார்பின்மைக்கும், நமது நாட்டின் பல கலாச்சார பாரம்பரியத்தையும் அழிக்கும் வேலைக்கு காங்கிரஸ் ஒருபோதும் ஆதரவு தராது, அனுமதிக்காது.
பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே மே 16ம் தேதியன்று உ.பியில் பெரும் மதக் கலவரம் வெடித்தது. அன்று முதல் உ.பியில் மதக் கலவரங்கள் தொடர்கின்றன. அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 12 தொகுதிகளில்தான் பெருமளவில் மதக் கலவரங்கள் நடக்கின்றன.
அதேபோல காஸாவில் அப்பாவிகளை கொத்துக் கொத்தாக இஸ்ரேல் கொன்று குவித்து வருவது குறித்து இதுவரை மோடி வாயே திறக்கவில்லை. அதுதொடர்பான நாடாளுமன்ற விவாதத்தைக் கூட இந்த அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் ராஜ்யசபாவில் இதுகுறித்து நாங்கள் விவாதிக்க முடிந்தது. எங்களது தொடர் போராட்டம் அங்கு மட்டுமே வென்றது.
பாலஸ்தீன மக்களுக்கும், நமக்கும் இடையிலான காலம் காலமான உறவை இந்த அரசு புறக்கணித்திருப்பது வேதனை தருகிறது என்றார் சோனியா காந்தி.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications