கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கெண்டியை என் முகத்தில் வீசினார், கை விரலை ஒடித்தார்: தோழி புகார்
பெங்களூர்: கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கெண்டியை தனது முகத்தில் வீசியதாகவும், தனது விரலை ஒடித்ததாகவும் அவரின் தோழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடக்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா விளையாடக்கூடும். ஆனால் அதற்கு முன்பு அவர் பெங்களூர் போலீஸ் முன்பு ஆஜராகி ஹோட்டல் அறையில் தனது தோழியை தாக்கியது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.

கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி பெங்களூரில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டது. அப்போது பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அமித் மிஸ்ரா தனது அறையில் தோழி ஒருவரை அடித்து தாக்கியுள்ளார். இதையடுத்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமித் மிஸ்ராவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர். அந்த பெண் தனது புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது,
அமித் டீ கெண்டியை தூக்கி என் முகத்தில் வீசினார். என்னை அடித்து நொறுக்கினார். மேலும் எனது விரலை ஒடித்தார். சினிமா தயாரிப்பாளரான நானும், அமித்தும் கடந்த 4 ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளோம். அவர் இல்லாத நேரத்தில் அவரின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததால் தான் அவருக்கும், எனக்கும் இடையே தகராறு ஏற்பட்டது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications