5 ரூபாய் லஞ்சம் வாங்கி சிக்கிய ஊழியர்.. பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்!
அகமதாபாத்: 5 ரூபாய் லஞ்சம் பெற்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 ரூபாய்க்கு இன்றைக்கு ஒரு டீ கூட வாங்க முடியாத நிலையில், கிராம மக்களிடம் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் விவசாயிகளுக்கு அரசு ஆவணங்களை வழங்குவதற்கு ரூ.5 வாங்கிய மோர்கண்டா கிராமத்தைச் சேர்ந்த கணினி ஆபரேட்டர் நவீன்சந்திர நகும் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.

மோர்கண்டா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில், வருவாய்த்துறையால் வழங்கப்படும் நில ஆவணங்கள் கேட்டு வருவோரிடம், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மோர்கண்டா, ஒவ்வொரு ஆவணத்திற்கும் 5 ரூபாய் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அரசால் வழங்கப்படும் ஃபார்ம்களுக்கு 5 ரூபாய் வசூலித்து வந்துள்ளார் அவர்.
எந்த ஆவணம் கேட்டாலும், ரூ.5 லஞ்சம் வாங்குவதாக, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மீது அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மோர்கண்டா இன்ஸ்பெக்டர் எம்.டி.படேல் தலைமையிலான குழுவினர், ரசாயனம் தடவிய ரூபாயை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
அதன்படி, அவர்கள் சென்று கணினி ஆபரேட்டரிடம் ஆவணம் கேட்டு பணம் கொடுத்துள்ளனர். அதனை வாங்கி நவீன் பாக்கெட்டில் போட்டதும் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். நவீன்சந்திர நகும் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்து போர்டு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் நவீன்சந்திர நகுமிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள இன்ஸ்பெக்டர் எம்.டி.படேல் "கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து நவீன்சந்திர நகும் இங்கு பணியாற்றி வருகிறார். விவசாயிகளுக்கு நில வருவாய் ஆவணங்கள் மற்றும் உரிமைக் கடிதங்களை வழங்குவது தான் அவருடைய வேலை. தினமும் இரண்டு மணி நேரமே வேலை செய்கிறார்.
விவசாயிகளுக்கு அரசு நில ஆவணங்களை வழங்க ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.5 வாங்கி வந்துள்ளார். புகாரின் அடிப்படையில் அவருக்கு பொறி வைத்து பிடித்தோம். மிகக்குறைவான தொகை என்றபோதிலும், இந்த லஞ்சம் ஊழல், நிர்வாகத்தின் அடிமட்டம் வரையிலும் பரவி இருக்கும் தன்மையை எடுத்துக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications