வி.ஐ.பி. கலாசாரம், ஊழலுக்கு முடிவு கட்டுவோம்! மாநில அந்தஸ்து பெறுவோம்- டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்
டெல்லி: டெல்லியை ஊழலற்ற மாநிலமாக்குவோம்; வி.ஐ.பி. கலாசாரத்துக்கு முடிவு கட்டுவோம்; டெல்லிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்று முதல்வராகப் பொறுப்பேற்ற அரவிந்த் கேஜ்ரிவால் உறுதியளித்துள்ளார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் மீண்டும் முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் இன்று பதவியேற்றார். அவருடன் மணிஷ் சிசோடியா உட்பட 6 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இந்தப் பதவியேற்புக்குப் பின்னர் தமது ஆதரவாளர்களிடையே அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிட்டோம் என்பதற்காக ஆணவமாக நடந்து கொள்ளாதீர்கள். அந்த ஆணவம்தான் பாரதிய ஜனதாவின் தோல்விக்கு காரணம்,
டெல்லியை 5 ஆண்டுகளில் ஊழலற்ற மாநிலமாக்குவோம். டெல்லியில் யாராவது லஞ்சம் கேட்டால் அவர்களது குரலை பதிவு செய்து எனக்கு அனுப்புங்கள். நானும் எங்கள் அமைச்சர்களும் 24 மணிநேரமும் உங்களுக்காக உழைப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிசியாக இருக்கிறார். அவரால் டெல்லியின் வளர்ச்சிக்கு முழு கவனம் செலுத்துவது கடினம். அவரை நான் சந்தித்த பொது டெல்லியின் முன்னேற்றத்துக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டேன். அவர் ஒத்துழைப்பு தருவதாக கூறினார்.
டெல்லி மக்கள் என்றுமே அமைதியைத்தான் விரும்புவார்கள். டெல்லியில் தேவாலயங்கள், கிறித்துவ பள்ளிக் கூட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிற்து.
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் காலம் வந்துவிட்டது. டெல்லி பாரதிய ஜனதா கட்சி, மாநில அந்தஸ்து கோரி வருகிறது. அந்த கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று பிரதமர் மோடியை நான் கேட்டுக் கொண்டேன்.
டெல்லியில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம். எங்கள் செயல்பாடுகளுக்கு ஊடகங்கள் எந்த ஒரு காலக்கெடுவையும் நிர்ணயிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
Delhi Police doesn't come under Delhi govt but will work in cooperation, ppl of all religions will be safe: Kejriwal pic.twitter.com/79HEHhNaSi
— ANI (@ANI_news) February 14, 2015 இங்கே நாங்கள் வி.ஐ.பி. கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். எந்த ஒரு அமைச்சரும் சாலையைக் கடக்கும் போது நிச்சயமாக போக்குவரத்தை நிறுத்த மாட்டோம். (அமைச்சர்கள் செல்லும் போது போக்குவரத்து நிறுத்தப்படுவதை விரும்புகிறீர்களா? என்று ஆதரவாளர்களிடம் கேஜ்ரிவால் கேட்டால்.. அதற்கு 'இல்லை' என்று பதில் எழுந்தது)
தேர்தலின் போது டெல்லி வர்த்தகர்கள் எங்களுக்கு பேருதவியாக இருந்தார்கள். நிச்சயம் அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்வோம். இங்கே நிதி பற்றாக்குறை எதுவும் இல்லை.
நீங்கள் வரியை முறையாக செலுத்துங்கள்.. நீங்கள் செலுத்தும் வரிப் பணத்தின் மூலம் உங்களுக்கான திட்டங்களை நாங்கள் செயல்படுத்துவோம்.
டெல்லி சட்டசபையில் 3 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் அவர்கள் எங்களுடன் இணைந்து பாடுபவர். ஒட்டுமொத்த டெல்லிக்காகத்தான் நாங்கள் ஆட்சி நடத்துகிறோம். அனைவருக்குமான பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம்.
டெல்லி போலீசாருடன் 24 மணிநேரமும் இணைந்து பணியாற்றுவோம். டெல்லியில் பெரும்பான்மை கிடைத்தது கடவுளின் பரிசு. இங்கே நல்லாட்சி நடத்திட துணைபுரிய வேண்டுமாறு கடவுளை நான் வேண்டுகிறேன்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கேஜ்ரிவால் உரையாற்றினார்.
தலைமைச் செயலகத்தில்...
இதன் பின்னர் டெல்லி தலைமைச் செயலகத்துக்கு சென்ற அரவிந்த் கேஜ்ரிவால் அங்கு முதல்வர் அலுவலகத்தில் தமது பொறுப்பேறை ஏற்றுக் கொண்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications