For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் அதிமுக - தேமுதிக மோதல்.. வாக்குவாதம்.. பரபரப்பு!

டெல்லி தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் அதிமுக - தேமுதிக இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் ஆணையத்தில் தேமுதிக, அதிமுக மோதல்- வீடியோ

    டெல்லி: தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் அதிமுக - தேமுதிக இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

    லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதையடுத்து, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில், இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

    தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    கூட்டத்தில் ஆலோசனை

    கூட்டத்தில் ஆலோசனை

    வாக்குசீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்றும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் எழுந்து வரும் கோரிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    51 மாநில கட்சிகள்

    51 மாநில கட்சிகள்

    இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகள் பங்கேற்கின்றன. திமுக சார்பாக டிகேஎஸ் இளங்கோவன் அதிமுக சார்பாக தம்பிதுரையும் பங்கேற்றுள்ளனர்.

    அதிமுக - தேமுதிக மோதல்

    அதிமுக - தேமுதிக மோதல்

    இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக-தேமுதிக பிரதிநிதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தலில் அதிமுக பணம் பட்டுவாடா செய்ததாக தேமுதிக பிரதிநிதி ஜிஎஸ்.மணி குற்றம்சாட்டினார்.

    கடும் வாக்குவாதம்

    கடும் வாக்குவாதம்

    இதற்கு அதிமுக பிரதிநிதியான தம்பிதுரை எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    மோதலால் பரபரப்பு

    மோதலால் பரபரப்பு

    இதைத்தொடர்ந்து எந்த கட்சி பெயரையும் குறிப்பிட்டு பேச கூடாது என தேர்தல் ஆணையம் கண்டிப்பு தெரிவித்தது. ஆலோசனை கூட்டத்தில் அதிமுக - தேமுதிக இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Conflicts between ADMK and DMDK in the Election commission discussion meeting. Election Commission conducts all party meeting in Delhi about 2019 loksabha election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X