வீதியில் பேசுவதற்கும், லோக்சபாவில் பேசுவதற்கும் வித்தியாசம் தெரியாதவர் சு. சுவாமி: காங்கிரஸ் சாடல்
டெல்லி: பாரதிய ஜனதா மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி வீதியில் பேசுவதற்கும், மாநிலங்களவையில் பேசுவதற்கும் வித்தியாசம் தெரியாதவராய் இருப்பதாக மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
மாநிலங்களவை நியமன எம்.பி.யாக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று மாநிலங்களவையில் பேசிய சுப்ரமணியன் சுவாமி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பு உள்ளதாக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை மீண்டும் தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வீதியில் பேசுவதற்கும், மாநிலங்களவையில் பேசுவதற்கும் வேறுபாடு தெரியாமல் எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை சுப்ரமணியன் சுவாமி சுமத்துவதாக கண்டனம் தெரிவித்தார். மாநிலங்களவையின் அலுவல்களை சீர்குலைக்கவே பாரதிய ஜனதா அவரை எம்.பி.யாக்கி இருப்பதாகவும் ஆசாத் குற்றம்சாட்டினார்.
இந்த விவாகரம் குறித்து மாநிலங்களவை தலைவர் பி.ஜே. குரியன் பேசுகையில் " நீங்கள் தேவையில்லாமல் ஆத்திரமூட்டும் விதமாக, பேசுகிறீர்கள். நான் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்" என்று கண்டித்தார். அவை விதிமுறைகளை புரிந்துகொண்டு, அவர் செயல்பட வேண்டும் என்றும் பிஜே குரியன் தெரிவித்தார்.
முன்னதாக, மாநிலங்களவை தொடங்கியதும், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, நியமன எம்.பி.யாக பதவியேற்று கொண்டார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications