முக்கிய தலைகளுக்கு கல்தா கொடுத்த பாஜக! வாரி அணைத்து கொண்ட காங்கிரஸ்! சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல்!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் வரும் 1ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், ஆளும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் 46 பேர் கொண்ட தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அடுத்தடுத்த வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்டியலில் தற்போது பல 'சிட்டிங்' எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை கட்சி 89 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.

வேட்பாளர்கள் அறிவிப்பு
குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் 8ம் தேதி அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில், தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. கடந்த 27 வருடங்களாக ஆட்சியில் இருந்து வரும் பாஜகவை அகற்ற காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 46 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை கட்சி அறிவித்துள்ளது. இந்த லிஸ்ட்டில் தற்போதைய எம்எல்ஏக்கள் பலரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக அக்கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மூத்த தலைவர்கள்
மாநிலத்தின் கட்சியின் செயல் தலைவராக உள்ள 'லலித் ககதாரா' மீண்டும் தங்கரா தொகுதியிலும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தனானிக்கு அம்ரேலி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல மூத்த எம்எல்ஏக்களான முகமது ஜாவேத் ரிர்சாடா, லலித் வசோயா, விக்ரம் மேடம், புஞ்சா வன்ஷ், விர்ஜி தும்மர், பிரதாப் துதாத், அம்ப்ரிஷ் டெர், நௌஷாத் சோலங்கி, பிரவின் முச்சாடியா, பாபு வாஜா என தற்போது எம்எல்ஏவாக உள்ளவர்களுக்கு அதே தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களுக்கும் மற்றொரு வாய்ப்பை கட்சி வழங்கியுள்ளது.

பாஜக
ஆனால், மறுபுறம் கட்சியிலிருந்து கடந்த 2 நாட்களில் மூன்று எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதில் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அவர் தனது மகனுக்கு வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் கட்சி அதற்கு அனுமதிக்காததால் அவர் பாஜகவுக்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இது காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ்-பாஜக மோதல் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ஆம் ஆத்மி தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. காங்கிரசுக்கு குஜராத் மாநிலத்திற்கென வலுவான தலைமை இல்லாததால் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி பிரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு மறுப்பு
மோர்பி பாலம் விபத்து, குஜராத் மாநில அரசு பள்ளிகளின் நிலைமை ஆகியவை தேர்தல் பரப்புரையில் பேசுபொருளாக மாறியுள்ளன. பாஜகவை பொறுத்த அளவில், மோர்பி பாலம் விபத்தில் மக்களை காப்பாற்றியவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல பல மூத்த எம்எல்ஏக்களை கட்சி கழற்றிவிட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை ஜாம் நகர் வடக்கு தொகுதியிலும், காங்கிரசிலிருந்து இணைந்த ஹர்திக் படேலை விரம்கம் தொகுதியிலும் கட்சி களமிறக்கியுள்ளது. எப்படியாயினும் தேர்தல் முடிவுகள் வந்த பின்னரே மக்கள் யார் பக்கம் நின்றிருக்கிறார்கள் என்பது தெரிய வரும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications