ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ததில் நம்பிக்கை இல்லை-அர்ஜூன் சிங்கின் பழைய கடிதத்தால் சர்ச்சை
ராஜீவ் காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ததில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்று 1999-ல் அர்ஜூன் சிங் எழுதிய பழைய கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ஜூன் சிங், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக எழுதிய கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை எழுப்பியுள்ளது.
1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தார். அப்போது பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

எம்டிஎம்ஏ
இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சதியின் பின்னணி குறித்து விசாரிக்க எம்டிஎம்ஏ என்ற விசாரணைக் குழுவும் 1999ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

அத்வானிக்கு கடிதம்
1999ம் ஆண்டு மார்ச் மாதம் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிக்கு, மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ஜூன் சிங் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நம்பிக்கை இல்லை
அந்தக் கடிதத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை செய்ததில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்று அர்ஜூன் சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும், எம்டிஎம்ஏ மற்றும் சிபிஐ தலையீடு இல்லாமல் சுதந்திரமாக விசாரணை இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெல்ட் வெடிகுண்டு பற்றி விசாரணை
இதுதவிர, வர்மா மற்றும் ஜெயின் கமிஷன்களை விமர்சித்தவர்கள் எம்டிஎம்ஏவில் இருக்கக் கூடாது என்று அர்ஜூன் சிங், அத்வானிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அர்ஜூன் சிங் எழுதியுள்ள கடிதம் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதுபெரும் காங்கிரஸ் தலைவரான அர்ஜூன்சிங் 2011-ம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications