பாஜகவின் கட்சி விழா போல் நடத்துவதா.. ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணித்தது காங்கிரஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாளை இரவு நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழா நடக்கிறது. இதனை பாஜகவின் கட்சி விழா போன்று நடத்துவதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி வருகிற 30ம் தேதி நள்ளிரவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

நீண்ட கால இழுபறிக்கு பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜூலை 1ல் அறிமுகம்

ஜூலை 1ல் அறிமுகம்

இதை தொடர்ந்து வருகிற 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி கட்டாயம் அமலாகிறது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்றத்தில் விழா

நாடாளுமன்றத்தில் விழா

நாளை நள்ளிரவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இதற்கான விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி அறிமுக விழாவில் ஜனாதிபதி பிரணாப், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், லோக்சபா தலைவர் சுமித்ரா மகாஜன், மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்.

அழைப்பு

அழைப்பு

நாடாளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு பாஜக அரசு அழைப்பு விடுத்திருந்தது. பாஜக கூட்டணிக் கட்சிகள் இதில் பங்கேற்க உள்ளன.

காங்கிரஸ் புறக்கணிப்பு

காங்கிரஸ் புறக்கணிப்பு

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கட்சி விழா போன்று நடக்கும் இதில் காங்கிரஸ் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா புறக்கணிப்பு

மம்தா புறக்கணிப்பு

ஜிஎஸ்டி விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். ஜிஎஸ்டி அறிமுகம் மத்திய அரசின் மற்றொரு மிகப்பெரிய தவறாகும் எனவும் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress boycotts midnight GST function will be held in parliament on June 30.
Please Wait while comments are loading...