ராகுல் கன்னத்தில் பளிச் முத்தம்.. வயநாடு வெள்ள பாதிப்பை பார்க்க போனபோது தொண்டரின் பாச மழை!
வயநாடு: வயநாடு மக்களவை தொகுதியில் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்யச்சென்ற ராகுலுக்கு, காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வயநாடு தொகுதிக்கு 4 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள ராகுல் காந்தி கடந்த இரண்டு நாட்களாக சுங்கம், மக்கியாடு, ஓமச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நிவாரணப் பணிகள் பற்றி கேட்டறிந்தார்.

நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் தனது சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு வயநாட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தூறலையும் பொருட்படுத்தாமல் ராகுலை சந்திக்கவேண்டும் என்பதற்காக வழியில் ஒரு குழு நின்று கொண்டிருந்தது. அவர்களை கண்ட ராகுல் காரை நிறுத்தி சந்தித்துக்கொண்டிருந்தார்.
ராகுல்காந்தியிடம் கைகுலுக்குவது போல் வந்த தொண்டர் ஒருவர், ராகுலின் முகத்தை இழுத்துப் பிடித்து அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.இதனை சற்றும் எதிர்பார்க்காத ராகுல் சற்று விக்கித்துப் போனார். உயர்மட்டப் பாதுகாப்பில் உள்ள ஒருவரை தொண்டர் இவ்வாறு அணுகியது பாதுகாப்பு அதிகாரிகளை கடும் கோபம்கொள்ளச் செய்தது. அவரை இழுத்துச் சென்ற அவர்கள் எச்சரித்து அனுப்பினர்.
மைக் பிடித்து பேசிய இடங்களில் எல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வயநாடு தொகுதி மக்கள் எடுத்துக்காட்டாக திகழ்வதாகவும், வெள்ளத்தின் போது சாதி, மதம், இனம், மொழி ஆகியவைகளை களைந்து ஒற்றுமையோடு செயல்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார் ராகுல்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications