ஹைதராபாத் விமான நிலைய பெயர் விவகாரம்- ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளி!
டெல்லி: ஹைதராபாத் ஐதராபாத் விமான நிலைய பெயர் விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ஹைதராபாத் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு என்.டி.ராமராவ் பெயர் அண்மையில் சூட்டப்பட்டது. சர்வதேச விமான நிலையம், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு தனியாக ராமராவ் பெயர் சூட்டியதை எதிர்த்து ராஜ்யசபாவில் இன்று தொடர்ந்து 2-வது நாளாக காங்கிரஸ் கட்சி பிரச்சினை எழுப்பியது.

இன்று காலை சபை தொடங்கியதும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஹனுமாந்தா ராவ், பெயர் மாற்றம் விவகாரத்தை எழுப்பினார். அரசியல் ஆதாயத்திற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியன், நீங்கள் மட்டுமே ராஜிவ் காந்தியின் மேல் அன்பு கொண்ட நபர் அல்ல. ஆனந்த் சர்மாவால் இப்பிரச்சனை நேற்று ஏற்கனவே எழுப்பப்பட்டது. இந்த பிரச்சினையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். இவ்விவகாரத்தை நீங்கள் மீண்டும் நீங்கள் பூஜ்ய நேரத்தின்போது எழுப்ப முடியாது. இப்பிரச்சனையை தெரிவிக்க வேண்டும் என்றால் முறைப்படி நோட்டீஸ் கொடுங்கள் என்றார்.
உடனடியாக காங்கிரஸ் எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இச்சம்பத்தை பார்த்துக் கொண்டு இருந்தார்.
இதனையடுத்து குரியன், நீங்கள் எதனை செய்கிறீர்களோ அது ஒழுக்கமற்றது. நீங்கள் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றால் முறைப்படி நோட்டீஸ் வழங்குங்கள், நீங்கள் உங்களுடைய இடத்திற்கு சென்று அமருங்கள் என்று கூறினார். தொடர்ந்து சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் சபை தொடங்கியதும் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications