2016ல் அரசியலில் இருந்து சோனியா ஓய்வு என்பது வதந்தி...: காங்கிரஸ்
டெல்லி: 2016ம் ஆண்டோடு அரசியலில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஓய்வு பெறப் போவதாக பரவி வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சித் தலைவரான சோனியா காந்தி தனது 70 வது வயதில், அதாவது வரும் 2016-ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாகவும், இதனால்தான் ராகுல் காந்திக்கு கட்சியில் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் சமீபத்தில் '24 அக்பர் சாலை' என்ற புத்தகத்தில் தகவல் வெளியாகி இருந்தது

இதனால், சோனியா விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என தகவல் பரவியது. தற்போது அதற்கு காங்கிரஸ் சார்பில் மறுப்புத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறியதாவது, ‘நான் அந்த செய்தியை படிக்கவில்லை. செயல்திறன்மிக்க சோனியா காந்தி தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். எனவே யாரும் அப்படி எதிர்பார்க்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications