மன்மோகன்சிங் மீது டிராய் முன்னாள் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு- மறுக்கிறது காங்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னை மிரட்டியதாக, டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் கூறியுள்ளது கற்பனையானது ஆதாரமற்றது என்று காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்து உள்ளது.

இந்திய சீர்திருத்தங்களின் முழு கதை-2ஜி, மின்சாரம் மற்றும் தனியார் நிறுவனங்கள் என்ற புத்தகத்தில் டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், 2ஜி விவகாரத்தில் அமைச்சரின் சொல்படி நடக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறியிருந்ததாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதை கடுமையாக மறுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, பிரதீப் பைஜாலின் குற்றச்சாட்டு கற்பனையானது, ஆதாரமற்றது என தெரிவித்துள்ளார். மேலும் பைஜால் பா.ஜ.க.விற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications