For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்த ஒத்த டிவீட்டால் பெரும் சர்ச்சை.. பாஜகவில் சேரப் போகிறாரா திவ்யா.. பரபரக்கும் கர்நாடகா

திவ்யா ஸ்பந்தனா பாஜகவில் இணைய போவதாக செய்திகள் கூறுகின்றன

Google Oneindia Tamil News

Recommended Video

    Divya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சை-பரபரக்கும் கர்நாடகா-வீடியோ

    புதுடில்லி: இந்த வேடந்தாங்கல் பறவை இங்கேயும், அங்கேயும் வந்துட்டு போகுமே.. அந்த மாதிரி ஆயிடுச்சு கட்சிக்காரர்கள் நிலைமை! இப்போ காத்து பாஜக பக்கம் அடிக்கவும், அங்கே தாவ போகிறார் போல காங்கிரஸ் பிரமுகரும், நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா!

    நடிகை திவ்யா ஸ்பந்தனா தமிழகத்துக்கு குத்து படம் மூலம் அறிமுகமானவர். பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். படத்துக்காக ரம்யா என்று பெயரை மாற்றி கொண்டார். வயசு 36 ஆகிறது.

    காங்கிரஸ் சார்பில் மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அடுத்து நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றாலும், காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவு பொறுப்பாளராக செயல்பட்டார். இந்த சின்ன வயசிலேயே இவ்வளவு பெரிய பொறுப்பை வகித்த திவ்யாவின் திறமையை ராகுல் அடிக்கடி பாராட்டி வந்தார்.

    பரமக்குடியில் மண்ணை கவ்வ இவர்கள்தான் காரணமா.. 3 பேர் மீது திமுகவின் கோப பார்வை!பரமக்குடியில் மண்ணை கவ்வ இவர்கள்தான் காரணமா.. 3 பேர் மீது திமுகவின் கோப பார்வை!

    பதவி விலகல்?

    பதவி விலகல்?

    இந்நிலையில் இப்போது தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிட்டது. வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்தது. இதனால் அப்செட் ஆன ராகுல் காந்தி பதவி விலக போவதாக சொல்லவும், அவரை மற்ற தலைவர்கள் சமாதானப்படுத்தி வருகிறார்கள். அந்த சமயத்தில்தான், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘ஒரு மாசத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் டிவி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள் என்று சொன்னார்.

    வாழ்த்து

    வாழ்த்து

    ஆனால் 2 நாளைக்கு முன்னாடி, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா, நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து சொல்லி இருந்தார். இது மிகப்பெரிய பரபரப்பை காங்கிரஸ் தரப்பில் ஏற்படுத்தியது.

    ஹாட் நியூஸ்

    ஹாட் நியூஸ்

    இப்போது ஹாட் நியூஸ் என்னவென்றால், எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல், ட்விட்டரில் இருந்து, திவ்யா அதிரடியாக வெளியேறியுள்ளார். மேலும் இதற்கு முன்பு, அவர் பதிவிட்டிருந்த தகவல்கள் எல்லாம் நீக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது அவர் குறித்து புதிய தகவல் வெளியாகி வருகிறது.

    காக்காவின் எச்சம்

    காக்காவின் எச்சம்

    திவ்யா, பாஜகவில் இணையலாம் என, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதே திவ்யாதான் பிரதமர் மோடியை பலமுறை கிழித்து தொங்க விட்டிருக்கிறார். படேல் சிலை நிறுவிய புதுசு.. அந்த சிலைக்கு அருகில் மோடி நின்று ஒரு போட்டோ எடுத்து கொண்டார். இதை பார்த்ததும் திவ்யா, "காக்காவின் எச்சம்" என்று விமர்சித்திருந்தார். இதற்கு முன்பும் இப்படித்தான் பிரதமரை ஏதோ அவதூறாக பேசியதாக தேச துரோக வழக்கும் திவ்யா மீது பாய்ந்தது.

    ஏன் விலகல்?

    ஏன் விலகல்?

    ஆனால் அரசியல் எதையும் அறியாதது. எஸ். எம்.கிருஷ்ணாவை ஏற்றுக் கொண்ட பாஜக, திவ்யாவையும் ஏற்கத் தயங்காது என்பது உண்மைதான். இருப்பினும் திவ்யா ஏன் விலகினார், அவரது மனதில் என்ன உள்ளது, என்ன திட்டமிட்டுள்ளார் என்பதை அவரே சொன்னால்தான் உண்டு. காத்திருப்போம்.

    English summary
    Congress social media Leader Divya Spandana left twitter after congratulatory post for Nirmala Sitharaman
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X