அடுத்த வாரம் பதவியேற்பு விழா.. நாராயணசாமி தகவல்
டெல்லி: புதுச்சேரியில் புதிய ஆட்சியின் பதவியேற்பு விழா அடுத்த வாரம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக சோனியா காந்தியுடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு நாரயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து சட்டசபை கட்சி தலைவராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆட்சியமைப்பது தொடர்பாக அவர் ஆளுநர் கிரண் பேடியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமையும் கோரியிருந்தார். தனது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்து அமைச்சர் பட்டியலையும் தயார் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று தனது அமைச்சரவை பட்டியலுடன் டெல்லி சென்ற அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பிற்குப் பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புதுச்சேரி அமைச்சரவை பரிந்துரை பட்டியலை சோனியாவிடம் கொடுத்திருக்கிறேன். அமைச்சரவை பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும். புதுச்சேரியின் முதல்வராக தாம் அடுத்த வாரம் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications