ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காங். தலைவர் ஆனந்த் சர்மாவை தாக்கிய மாணவர்கள்
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது மாணவர்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மாவை தாக்கியுள்ளனர்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்ட மாணவர் சங்க தலைவர் கன்ஹையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குமார் இந்தியாவுக்கு எதிராக எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா ஆகியோர் பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்து பேசினர்.
அவர்கள் அங்கிருந்து கிளம்புகையில் மாணவர்களில் சிலர் ஆனந்த் சர்மாவின் இடது காதில் திரும்பத் திரும்ப தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும் மாணவர்கள் ராகுலின் காரையும் சுற்றிவளைத்தனர்.
இந்நிலையில் ஆனந்த் சர்மாவை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications