பளார்.. பளார்.. ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை.. பிரச்சாரத்தில் ஷாக்- வீடியோ
குஜராத் சுரேந்தர் நகரில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் ஹர்திக் பட்டேலை கன்னத்தில் ஒருவர் அறைந்தார்.
Recommended Video
அஹமதாபாத்: குஜராத் சுரேந்தர் நகரில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் ஹர்திக் பட்டேலை கன்னத்தில் ஒருவர் அறைந்தார். இதனால் பிரச்சாரத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
2015ல் குஜராத்தில் பட்டேல் ஜாதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தை, பட்டேல் குழுவில் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார்.
இந்த போராட்டத்திற்கு பின் இவர் பெரிய அரசியல் தலைவராக உருவெடுத்தார். தனி நபராக செயலாற்றி வந்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் இவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முடியாது
ஆனால் 2015 குஜராத் கலவர வழக்கில் இவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் ஹர்திக் பட்டேல் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் விஸ்நகரில் இருந்த பாஜக கட்சியின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

ஆனால்
இதில் ஹர்திக் பட்டேலுக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில் அவரின் சிறை தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் அவர் குற்றம் செய்தவர்தான் என்று நீதிமன்றம் கூறியது. இவர் குற்றம் செய்தவர் என்பதால் தற்போது இவர் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
|
சர்ச்சை
ஆனால் இவர் காங்கிரஸ் கட்சிக்காக தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த குஜராத் சுரேந்தர்நகரில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது ஹர்திக் பட்டேலை கன்னத்தில் ஒருவர் அறைந்தார். இதனால் பிரச்சாரத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

யார்
தாக்கிய நபர் பாஜக ஆதரவாளர் என்று தெரிய வருகிறது. கன்னத்தில் அறைந்தவரை பிடித்து அங்கிருந்த தொண்டர்கள் அடித்து உதைத்தனர். தற்போது இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications