For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 மாநில சட்டசபைத் தேர்தல்கள் - பிரசாரத்திற்காக புதுக் குரல்களைத் தேர்வு செய்யும் காங்.

Google Oneindia Tamil News

Congress looks for articulate voices ahead of crucial elections
டெல்லி: டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்களின்போது காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்வதற்காக புதிய பேச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.

பழைய பேச்சாளர்களை விட புதியவர்களை அறிமுகப்படுத்தினால் நல்லது என்ற அடிப்படையில் இந்த பேச்சாளர் தேர்வுநடந்து வருகிறதாம்.

நவம்பர் மாதம் இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் கட்சிக்காக பிரசாரம் செய்வதற்காக பலரை தேர்வு செய்து வருகிறது காங்கிரஸ். 35 வயதுக்குட்பட்ட 45 பேரைத் தேர்வு செய்து அதிலிருந்து தற்போது 32 பேரை இறுதி செய்துள்ளனராம்.

அவர்களுக்கு காங்கிரஸ் கூட்டணி அரசின் திட்டங்கள் குறித்தும், அரசு செய்துள்ள சாதனைகள் குறித்தும், எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தை எப்படி முறியடிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாம்.

மேலும் பொருளாதார பிரச்சினை, பணவீக்கம் உள்ளிட்டவை குறித்தும் விளக்கம் கொடுக்கப்படவுள்ளதாம்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் கேரளாவைச் சேர்ந்த இளம் எம்.எல்.ஏ ஷபி, குஜராத்திலிருந்து ஹிமன்ஷு வியாஸ், அம்ரிதா தவான், செஷாத் பூனாவாலா ஆகியோர் முக்கியமானவர்கள். அத்தனை பேருக்கும் டெல்லியில் 5 நாள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

English summary
Ahead of the crucial assembly polls in Delhi, Rajasthan, Madhya Pradesh and Chhattisgarh, the Congress party wants to infuse new energy into their spokespersons. Elections in these states are due by November; the general elections before May 2014. The party has shortlisted a group of 45 members, mostly under the age of 35 years, who would be trained and evaluated on their ability to articulate the party's viewpoint in the media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X