இந்தியாவின் தலைநகரம் டெல்லி... இரண்டாவது தலைநகரம் எது தெரியுமா?
கர்நாடகாவுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூருவை நாட்டின் இரண்டாவது தலைநகராக மாற்றுவதாக கூறப்பட்டுள்ளது.
டெல்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் இரண்டாவது தலைநகராக பெங்களூரு மாற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் அடுத்த மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சட்டசபை தேர்தலையொட்டி, கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள், பெங்களூரு நாட்டின் இரண்டாவது தலைநகராக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கமாக முறையில் இல்லாமல் இந்த முறை, மாநிலத்தின் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தனித் தனியாக தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தயாரித்துள்ளது.
அதில் பெங்களூரு குறித்த தேர்தல் அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், சாலை, பாலம் உள்பட பல்வேறு கட்டமைப்பு வசதிகள், ஒரு லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பூங்காக்கள் நகரம் என்ற பெயர் பெற்ற பெங்களூருவில் உள்ள பூங்காக்கள் மேம்படுத்தப்படும். மேலும், ஏரிகள், குளங்கள் போன்றவை புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும். நகரம் முழுவதும் சோலார் மின்வசதி செய்யப்படும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க வசதி செய்யப்படும்.
மொத்தத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் இரண்டாவது தலைநகராக பெங்களூரு மாற்றப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை












Click it and Unblock the Notifications