For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பாவி இளைஞரை துரத்தி துரத்தி தாக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ மகன்.. கர்நாடகாவில் புயலாகும் விவகாரம்

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.ஏ.ஹாரிஸின் மகன் முகமது நாலாபத் அப்பாவி இளைஞர் ஒருவரை மோசமாக தாக்கி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.ஏ.ஹாரிஸின் மகன் முகமது நாலாபத் அப்பாவி இளைஞர் ஒருவரை மோசமாக தாக்கி இருக்கிறார். தேர்தல் சமயம் என்பதால் அங்கு இந்த பிரச்சனை புயலை கிளப்பி இருக்கிறது.

கர்நாடக முதல்வர் இதில் உடனடியாக களம் இறங்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். போலீஸ் தற்போது நாலாபத்தை தேடி வருகின்றனர்.

தாக்கப்பட்ட நபர் தற்போது மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சிலர் மட்டும் இதில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

 எப்படி பிரச்சனை

எப்படி பிரச்சனை

தாக்கப்பட்ட நபர் டாலர் காலனி பகுதியை சேர்ந்த வித்வாத் ஆவார். இவர் ஹோட்டலில் சாப்பிடும் போது காலில் பிளேட் கட்டப்பட்டு இருந்ததால் நீட்டி வைத்து சாப்பிட்டு இருக்கிறார். அவரை காலை மடக்க சொல்லி நாலாபத் மற்றும் அவரின் நண்பர்கள் பிரச்சனை செய்து உள்ளார்கள்.

 அடி

அடி

அவர் காலை மடக்க முடியாது என்று கூறியதும் மோசமாக தாக்கி இருக்கிறார்கள். 10 பேர் சேர்ந்து மாற்றி மாற்றி அவரை அடித்துள்ளனர். அவரை அடிப்பதை புகைப்படமும் எடுத்துள்ளனர். பின் அவர் அங்கிருந்து தப்பி மருத்துவமனை சென்று இருக்கிறார்.

 மீண்டும்

மீண்டும்

ஆனால் விடாமல் மீண்டும் அந்த நபரை நாலாபத் தாக்கி இருக்கிறார். மருத்துவமனைக்கு தொடந்து சென்று தாக்கி உள்ளார். இதனால் அவரின் முகம் மொத்தமாக சிதைந்தது. மருத்துவமனை நிர்வாகிகளை மோசமாக நடத்தி உள்ளார்.

நீக்கம்

நீக்கம்

இவரின் நண்பர்களில் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் நாலாபத் எங்கே இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் இவரை தேடி வருகிறார்கள். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 வருடத்திற்கு நீக்கப்பட்டுள்ளார்.

English summary
A FIR has been registered against Bengaluru District Youth Congress General Secretary Mohammed Haris Nalapad and ten others for allegedly beating up a person in a restaurant in Bengaluru's UB City & threatening him at a hospital where he later went for treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X