டெல்லி: பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷவர்தன் மீதுகூடத்தான் பலாத்கார புகார் வந்தது: காங்.

டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் பலாத்கார விவகாரங்கள் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின் போது டெல்லியில் ஆளும் காங்கிரஸ் அரசால் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளரான டாக்டர் ஹர்ஷவர்தன் சாடியிருந்தார்.
இதற்கு பதில் கொடுக்கும் வகையில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், அமைச்சர்கள் ஹாரூன் யூசும் ராஜ்குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, காங்கிரஸ் அரசு மீது புகார் கூறும் ஹர்ஷவர்தன் அவரது வீட்டு வேலைக்கார பெண்ணை பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. அவர் அமைச்சராக இருந்த 1998ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கே பாதுகாக்க முடியாதவர் ஹர்ஷவர்தன். அவரால் ஒட்டுமொத்த டெல்லி பெண்களுக்கும் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
ஆனால் ஹர்ஷவர்தன் இதனை மறுத்துள்ளார். தம் மீதான புகாருக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.. காங்கிரஸ் கட்சியினர் விரக்தியில் பேசுகின்றனர் என்றார்.
1996ஆம் ஆண்டு ஹர்ஷவர்தன் மீது அவரது வீட்டு வேலைக்கார பெண் பலாத்கார புகார் தெரிவித்திருந்தார். இதை ஹர்ஷவர்தன் மறுத்ததுடன் மரபணு சோதனைக்கும் தயார் என அறிவித்தார். அதன்படி மரபணு சோதனை நடத்தப்பட்டது.. பின்னர் ஹர்ஷதவர்தனுக்கு எதிரான புகாருக்கு ஆதராரமில்லை என்று போலீஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications