தேர்தல் நிதி அளிப்பவர்களின் பெயர்களை வெளியிட காங்கிரஸ் மறுப்பு

தேர்தல் நிதி பெறும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு நிதி அளித்தவர்கள் யார்? எவ்வளவு தொகை அளித்தார்கள்? என்ற விபரத்தை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என 10 ஆலோசனைகளை வெளியிட்டது தேர்தல் தமிஷன்.
இந்நிலையில், தேர்தல் கமிஷனின் இந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என மறுத்துள்ளது காங்கிரஸ்.
இதுகுறித்து அக்கட்சியின் பொருளாளர் கூறுகையில், 'ஒவ்வொரு நன்கொடைக்கும் ரசீது கொடுத்துக் கொண்டு தேர்தல் கமிஷனுக்கு கணக்கு காட்டிக் கொண்டிருக்க முடியாது' எனக் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனுக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, 'கம்பெனிகள் சட்டத்தின்படி, வணிக நிறுவனங்கள் தான் வரவு - செலவு புத்தகங்களை பராமரிக்க வேண்டும்.
இந்த சட்டம் அரசியல் கட்சிகளுக்கு பொருந்தாது. கட்சியின் நிதியை வங்கிகளில் வைத்திருப்பதா? அல்லது கட்சி அலுவலகங்களில் வைத்திருந்து செலவு செய்வதா? என்பது அரசியல் கட்சிகளின் விருப்பத்துக்கு உட்பட்ட விவகாரம்.
தேர்தல் கமிஷனின் உத்தரவுபடி, அரசியல் கட்சிகள் நடந்துக்கொள்ள வேண்டுமென்றால் இதர கட்சிகளுடன் கலந்தாலோசித்து 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 324வது அம்சத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் அதிகளவு அடையாளாமில்லாத நிதி அளிப்பவர்களைக் கொண்ட கட்சி என காங்கிரஸ் அடையாளாம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications