''அசிங்கப்பட்டான்டா ஆட்டோக்காரன்''.. காங்கிரஸைப் பார்த்து கேலி செய்யும் பாஜக!
டெல்லி: வாஜ்பாய் படத்தைப் போட்டு விளம்பரம் செய்யும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி போயிருப்பது, அதன் தோல்வி பயத்தை, விரக்தியை வெளிப்படுத்துகிறது என்று பாஜக வர்ணித்துள்ளது.
மிகப் பெரிய விரக்தியில் காங்கிரஸ் தள்ளப்பட்டு விட்டது என்றும் பாஜக கூறியுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், மிகப்பெரிய பதட்டத்துக்குப் போய் விட்டது காங்கிரஸ். மிகப் பெரிய விரக்தியில் மூழ்கி விட்டது.

அதனால்தான் வாஜ்பாயை தனக்கு ஆதரவாக இழுத்துள்ளது. வாஜ்பாயை திடீரென பாராட்டியுள்ளது. இது கேவலமானது. காங்கிரஸ் கட்சியின் முயற்சியைப் பார்க்கும்போது அக்கட்சி மிகப் பெரிய தோல்வியைத் தழுவுவது உறுதி என்பது தெளிவாகிறது.
வாஜ்பாயை மிகப் பெரிய தலைவர் என்று காங்கிரஸ் இப்போது பாராட்டுகிறது. ஆனால் அவர் பிரதமராக இருந்தபோது அவரை கடுமையாக விமர்சித்த கட்சிதான் இந்த காங்கிரஸ். இப்போது திடீரென வாஜ்பாயை மிகப் பெரிய தலைவர் என்று பாராட்டுவது அதன் விரக்தி மனதைத்தான் வெளிப்படுத்துகிறது என்றார் பிரசாத்.


Click it and Unblock the Notifications
