ராகுல் காந்தியின் "பெஸ்ட்" பிரச்சாரம்.. தோற்றாலும் காங்கிரஸுக்கு வெற்றியே.. கெலாட்!
குஜராத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காந்திநகர்: குஜராத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியின் அசாத்திய பிரசாரத்துக்கு கிடைத்த "வெற்றி"யாகவே பார்க்கிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது. காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் தனிபெரும்பான்மைக்கு 92 இடங்கள் மட்டுமே தேவை.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்தி இந்த தேர்தல் வெற்றிகள் பின்னடைவாக இருக்குமோ என்ற கேள்விக்கு மூத்த தலைவர் அசோக் கெலாட் அளித்த பதிலில், காங்கிரஸ் கட்சியின் பிரசார யுத்தி மற்றும் ராகுல் காந்தி செய்த பஸ் பயணங்கள் என நாங்கள் பிரசாரத்தை அசத்தியுள்ளோம். தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும் சரி காங்கிரஸ்ஸின் வெற்றியாகத்தான் இதை நாடு பார்க்கிறது.
பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை மூலம் குஜராத் மக்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெற்றிக்கரமாக பிரதிபலித்துள்ளோம். அதில் நாங்கள் வெற்றி பெற்றதாகவே நம்புகிறோம் என்றார் அவர்.
மண்ணின் மைந்தன் என்ற விவகாரத்தை முன்வைத்து பாஜக பிரசாரம் செய்ய முயற்சித்தது குறித்த கேள்விக்கு அசோக் கெலாட் கூறுகையில், குஜராத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட பிரதமர் மோடி என்பதை பாஜகவினர் முன்வைக்க முயற்சித்தனர். எனினும் நாங்கள் குஜராத் மக்களுக்கு நல்லதொரு கருத்தை முன்வைத்தோம்.
மண்ணின் மைந்தன் போன்ற விமர்சனங்களை முன்வைத்து பிரசாரம் செய்வது காங்கிரஸ் கட்சியின் பண்பாடு அல்ல. ராகுல் காந்தியும் பிரதமருக்கு எதிராக எந்த வொரு விமர்சனங்களையும் முன்வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார். சோனியா, ராகுல் மற்றும் மன்மோகன் குறித்து அவர்கள் முன்வைத்தது போன்ற விமர்சனங்களுக்கு அதே பாணியில் பதிலடி கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.
தேர்தல் முடிவுகள் எதுவாகினும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிரசாரத்துக்கு மக்கள் அளித்த வெற்றியாகவே நாங்கள் கருதுகிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications