For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுடன் சேர காங்கிரஸ் கடைசி முயற்சி.. ஆனால் 'சான்ஸ்' இல்லை?

|

டெல்லி: பெரிய கட்சிகள் முற்றிலுமாக நிராகரித்து விட்ட நிலையில், பொடிக் கட்சிகள் கூட தங்களை நாடாத நிலையில், கூட்டு சேர யாருமே இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி தற்போது திமுகவுடன் கூட்டு சேர கடைசி முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இந்தக் கூட்டணிக்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றே கருதப்படுகிறது. காரணம், திமுக தரப்பில் குறிப்பாக மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கூட்டணியை விரும்பவில்லை என்று தெரிகிறது.

இருந்தாலும் எப்படியாவது கூட்டணியில் இணைய காங்கிரஸ் தரப்பில் சிலர் தீவிரமாக முயன்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏதாவது ஒரு பெரும் தலையுடன்

ஏதாவது ஒரு பெரும் தலையுடன்

கடந்த பல வருடங்களாகவே லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதில்லை காங்கிரஸ். அதிமுக அல்லது திமுகவுடன் அணி சேர்ந்தே போட்டியிட்டுள்ளது.

முதல் முறையாக

முதல் முறையாக

முதல் முறையாக தற்போது தனித்துப் போட்டியிடும் நிலைக்கு் அது தள்ளப்பட்டுள்ளது.

தள்ளி விட்டு விட்ட பெரிய கட்சிகள்

தள்ளி விட்டு விட்ட பெரிய கட்சிகள்

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே காங்கிரஸை நிராகரித்து விட்டன. தேமுதிகவும் காங்கிரஸுடன் சேர விரும்பவில்லை. பாமக உள்ளிட்ட கட்சிகளும் விரும்பவில்லை.

ஈழத் தமிழர் விரோத நிலையே காரணம்

ஈழத் தமிழர் விரோத நிலையே காரணம்

காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு ஈழத் தமிழர் வி்வகாரத்திலும், இலங்கை விவகாரத்திலும், தமிழக மீனவர் வி்வகாரத்திலும் மத்திய காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட அடாவடிப் போக்கே காரணம். மக்கள் அந்த அளவுக்கு காங்கிரஸ் மீது ஆத்திரத்தில் உள்ளனர்.

பாஜகவை விட நிலைமை மோசம்

பாஜகவை விட நிலைமை மோசம்

தற்போது பாஜக கூட்டணியை பல கட்சிகளும் விரும்பும் நிலையில் காங்கிரஸை சீந்த யாருமே இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது அக்கட்சியின் தலைமையைக் கவலையுறச் செய்துள்ளது.

மீண்டும் திமுகவை நாடும் காங்.

மீண்டும் திமுகவை நாடும் காங்.

இப்படி நாலாபக்கமும் அணை போடப்பட்டு விட்டதால், எந்தப் பக்கம் போவது என்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ், மீண்டும் திமுகவின் தயவை நாடுவதாக தெரிகிறது.

அதெல்லாம் அந்து போகவில்லை

அதெல்லாம் அந்து போகவில்லை

இதுகுறித்து தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக காங்கிஸ் தலைவர் ஞானதேசிகன் கூறுகையில், ராஜ்யசபா தேர்தலில் கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. எனவே 2 கட்சிகளுக்கிடையேயான உறவுகள் அறுந்துவிடவில்லை என்று கூறியுள்ளார். இதற்கு என்ன அர்த்தம் என்பது தெரியவில்லை.

திமுக பணியுமா

திமுக பணியுமா

காங்கிரஸை திமுக நிராகரிக்க முக்கியக் காரணமே 2ஜி விவகாரம்தான். குறிப்பாக திமுக தலைவர் கருணா்நிதியின் மனைவி தயாளு அம்மாளையே விசாரிக்க வைக்கும் அளவுக்கு காங்கிரஸ் அரசு கண்ணியமில்லாமல் நடந்து கொண்டதாக திமுக தரப்பு கடும் ஆத்திரத்தில் உள்ளது. எனவேதான் அது காங்கிரஸ் கூட்டணியை உதறி விட்டது.

இப்போது மீண்டும் காங்கிரஸ் தரப்பிலிருந்து திமுகவுக்கு ஓலை போயுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக இறங்கி வருமா என்பதுதான் தெரியவில்லை.

English summary
Delhi sources say that Congress is trying to woo DMK in the last minute for forging an alliance to face the LS election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X