லோக்சபா தேர்தல்: பெங்களூர் வடக்கு, மத்திய தொகுதி வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் காங். திணறல்
லோக்சபா தேர்தல்: பெங்களூர் வடக்கு, மத்திய தொகுதியில் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் காங். திணறல்
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் பெங்களூர் மத்திய மற்றும் வடக்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வருகின்றது.
லோக்சபா தேர்தலில் பெங்களூர் மத்திய மற்றும் வடக்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதில் பாஜகவுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் காங்கிரஸோ திணறிக் கொண்டிருக்கிறது.
மத்திய பெங்களூர் தொகுதியில் பாஜக எம்.பி. பி.சி. மோகனை நிறுத்தவிருக்கிறது. மேலும் பெங்களூர் வடக்கு தொகுதியில் போட்டியிட முன்னாள் துணை முதல்வர் ஆர். அசோகா மற்றும் மல்லேஸ்வரம் எம்.எல்.ஏ. சி.என். அஸ்வத்நாராயண் ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
ஆனால் காங்கிரஸில் பலர் போட்டியிட விரும்புவதால் வேட்பாளர் தேர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.பி.க்கள் ஹெச்.டி. சாங்க்லியனா, சி.கே. ஜாஃபர் ஷரீப் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரிஸ்வான் அர்ஷத் ஆகியோரின் பெயர்களை காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தேர்தல் குழு தேர்வு செய்துள்ளது.
பாஜக எம்.பி. ஆக இருந்த சாங்க்லியனா இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்தார். காங்கிரஸுக்கு தாவிய அவர் அக்கட்சி தலைவர் சோனியா காந்தியின் நன்மதிப்பை பெற்றவர்.
பெங்களூர் வடக்கு தொகுதியிலும் வேட்பாளரை இறுதி செய்வதில் காங்கிரஸுக்கு தலைவலியாக உள்ளது. இந்த தொகுதியில் கட்சி நிர்வாகி ரமேஷ் ஆர் கௌடா, முன்னாள் சட்டமன்ற குழு தலைவர் பி.எல். ஷங்கர் மற்றும் ஐஐஎம் பெங்களூரில் பேராசிரியராக இருக்கும் ராஜீவ் கௌடா ஆகியோரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications