"காங். சர்க்கஸ் கூடாரத்து எம்.டி ராகுல்"- விமர்சித்த ராஜஸ்தான் எம்.எல்.ஏ சஸ்பென்ட்!!
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை காந்தியை சர்க்கஸ் கூடாரத்தின் எம்.டி. என மிகக் கடுமையாக விமர்சித்ததற்காக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வார்லால் சர்மா அக்கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு ராகுல், அவரது ஆலோசகர்கள்தான் காரணம் என்று காங்கிரசில் போர்க்கொடி தூக்கும் தலைவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கேரளா முன்னாள் அமைச்சர் ஒருவர், ராகுலை ஜோக்கர் என்று கடுமையாக விமர்சித்தார். இதனால் அவர் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இதேபோல் ராஜஸ்தான் மாநில காங்கிரசிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அம்மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏ.வான பன்வார்லால் சர்மா ராகுலுக்கு எதிராக நேற்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் தற்போதைய மோசமான நிலைக்கு ராகுல்தான் காரணம். அவரிடம் கொள்கையோ, தொலைநோக்கு பார்வையோ எதுவும் இல்லை. ராகுலும், அவரது ஆலோசகர்களும் கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு மக்களிடம் ஆதரவு இல்லை.
அவர் காங்கிரஸ் கட்சியின் சர்க்கஸ் கூடாரத்து எம்.டி.யாக இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதை புரிந்து கொண்டு, மகன் மீது கரிசனம் காட்டாமல் கட்சியை பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இது குறித்து பேசுவதால் கட்சித் தலைமை என்மீது நடவடிக்கை எடுக்கும். இப்போது உண்மையை சொல்வது முக்கியம் என்பதால் இதை கூறுகிறேன் என்றார்.
இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பன்வார்லால் சர்மா இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications