55 வயது பாஜக தலைவருக்கு விபரீத ஆசை.. 25 வயது இளைஞரை படுத்திய பாடு.. காங். கோபம்
போபால்: 25 வயது இளைஞரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, பாஜக தலைவர் ஒருவர் மீது பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையின் பாஜக டிவிஷனல் செயலாளராக பதவி வகித்தவர் 55 வயதாகும், பிரதீப் ஜோஷி. ஆளுக்கு வயதாகியுள்ளதே தவிர, விவஸ்தை இல்லை என்று தெரிகிறது. 25 வயதாகும் ஒரு இளைஞரிடம் ஓரினச்சேர்க்கை உறவுக்கு முயன்றுள்ளார் இந்த பிரதீப் ஜோஷி.

ஆபாச படங்களை அனுப்பி, ஆபாச மெசேஜ்களையும் அனுப்பி இளைஞருக்கு பாலியல் சீண்டல் கொடுத்துள்ளார். இதுதொடர்பான சாட்டிங் விவரங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, அவரை கட்சி பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது பாஜக.
ஆனால், இதை சும்மாவிடுவதாக இல்லை காங்கிரஸ். மத்திய பிரதேச காங்கிரஸ் செயலாளர் ராகேஷ் சிங் யாதவ் "பாலியல் சுரண்டல்" என்று குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய யாதவ், "கடந்த 20 நாட்களிலிருந்து ஜோஷி அந்த நபருடன் சாட்டிங்கில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார். இப்போது, அந்த வாலிபர் தனது பாதுகாப்புக்கு அஞ்சி தலைமறைவாகிவிட்டார்.
இதற்கிடையில், மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் உமேஷ் சர்மா காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை அரசியல் நோக்கம் கொண்டதாகக் குறிப்பிட்டார், மேலும் இந்த விஷயம் பகிரங்கமான பின்னர் ஜோஷி தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.
உஜ்ஜைன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சச்சின் அதுல்கர், கூறுகையில், பாலியல் சுரண்டல் பற்றியோ அல்லது வாலிபர் காணாமல் போனதாகவும், எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. இந்த சம்பவம் குறித்து ஊடக செய்திகள் மூலமே தெரிந்து கொண்டோம் என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications